ஈராக்கில் கிளோரின் வாயு கசிவு - 600 புனித யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் அனுமதி

10 ஆவணி 2025 ஞாயிறு 17:41 | பார்வைகள் : 177
ஈராக்கில் கிளோரின் வாயு கசிவு காரணமாக 600 புனித யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் நஜஃப் மற்றும் கர்பலா எனும் இரு புனித நகரங்களுக்கு இடையில் உள்ள பாதையில், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கசிந்த கிளோரின் வாயுவை சுவாசித்த 600-க்கும்மேற்பட்ட யாத்திரிகர்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கர்பலா நோக்கி அர்பைன் யாத்திரையில் சென்றுகொண்டிருந்த ஷியா முஸ்லிம்கள்.
இதுகுறித்து ஈராக் சுகாதார அமைச்சும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "621 பேர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தனர். அனைவரும் தேவையான சிகிச்சையை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியதாக விட்டு வெளியேறியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு படைகள் இந்த வாயு கசிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஏற்பட்டுள்ளத்தை உறுதிசெய்துள்ளனர்.
ஈராக் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் பல ஆண்டுகளாக நடந்த போர்கள் மற்றும் ஊழல்களால் சீரழிந்துள்ளன. இங்கு பாதுகாப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை.
இதற்குமுன், ஜூலையில் குத் நகரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1