இஸ்ரேலின் திட்டத்திற்கு பிரித்தானியா கடும் எதிர்ப்பு

10 ஆவணி 2025 ஞாயிறு 12:39 | பார்வைகள் : 191
காசாவில் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் திட்டத்திற்கு 5வது நாடாக பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது.
காசாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அகற்றி, பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளுக்காக காசாவை முழுவதுமாக கட்டுப்பாட்டில் எடுக்க போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
நெதன்யாகுவின் இந்த திட்டத்திற்கு சமீபத்தில் அவரது அமைச்சரவையும் ஒப்புதல் அளித்த நிலையில், உலக அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், காசாவை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் ராணுவ நடவடிக்கையை அதிகரிக்கும் இஸ்ரேலின் திட்டம் நிலைமை மேலும் மோசமடைய செய்யும் என எச்சரித்துள்ளது.
ஏற்கனவே காசாவில் மனிதாபிமான சூழ்நிலைகள் மோசமாக உள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த திட்டம் சிக்கலை அதிகரிப்பதுடன், பிணைக் கைதிகளின் உயிருக்கும் ஆபத்தானதாக மாற்ற கூடும்.
அதே சமயம் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைக்க கூடும் என்றும், பொதுமக்கள் அதிக அளவில் இடம் மாறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், காசாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கும் இந்த 5 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த கூட்டறிக்கைக்கு முன்னதாக, பிரான்ஸ் கனடா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவையும் இஸ்ரேலின் ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1