Paristamil Navigation Paristamil advert login

டிரம்ப் மற்றும் புடினுக்கு இடையேயான சந்திப்பு- முடிவுக்கு வரும் போர்..

டிரம்ப் மற்றும் புடினுக்கு இடையேயான சந்திப்பு- முடிவுக்கு வரும் போர்..

10 ஆவணி 2025 ஞாயிறு 12:39 | பார்வைகள் : 204


டிரம்ப் மற்றும் புடினுக்கு இடையேயான சந்திப்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த போரை நிறுத்த தீவிர முயற்சி எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வரும் ஒகஸ்ட் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் ரஷ்யா அதிபர் புடினை சந்தித்து பேச உள்ளார்.

 

இந்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை உக்ரைன் விட்டு கொடுக்க வேண்டும் போன்ற தீர்வுகள் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை முடிவு, உக்ரைனுக்கு பாதகமாவே என கருதும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த சந்திப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைன் இல்லாமல் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவுகளும் அமைதிக்கு எதிரானது. அது எந்த ஒரு தீர்வையும் தராது. செயலாற்ற தீர்வுகளாகவே இருக்கும்.

 

உக்ரைனின் பிராந்தியம் தொடர்பான கேள்விக்கு பதில் எங்களின் அரசியலமைப்பில் உள்ளது. அதில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டோம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு உக்ரைனின் நிலத்தை விட்டுத்தர முடியாது" என தெரிவித்துள்ளார்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்