Paristamil Navigation Paristamil advert login

கடலில் மூழ்கப்போகும் தீவு தேசம்.... மொத்த நாடும் குடிபெயரும் முயற்சி

கடலில் மூழ்கப்போகும் தீவு தேசம்.... மொத்த நாடும் குடிபெயரும் முயற்சி

10 ஆவணி 2025 ஞாயிறு 11:39 | பார்வைகள் : 325


கடலில் மூழ்கப்போகும் தீவு நாடொன்று, உலகிலேயே முதல்முறையாக திட்டமிட்டு குடியேறும் நாடாக வரலாற்றில் இடம்பெறவுள்ளது.

 

துவாலு (Tuvalu) பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவுகளால் ஆனா நாடாகும். கடல்மட்ட உயர்வு காரணமாக இந்த நாடு அடுத்த 25 ஆண்டுகளில் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

 

இதனால், அந்நாட்டில் வாழும் 11,000 மக்களும் மொத்தமாக இடம்பெயரவேண்டிய கட்டாயட்ச்த்தில் உள்ளனர்.

 

 

இந்நிலையில், துவாலு உலகிலேயே முதல்முறையாக ஒரு முழு நாட்டையும் திட்டமிட்டு குடிபெயரும் முயற்சியை தொடங்கியுள்ளது.

 

துவாலுவின் நிலப்பரப்பின் சாராராசி உயரம் 2 மீட்டர் மட்டுமே. 2023-ஆம் ஆண்டில் கடல்மட்டம் 15 செ.மீ. உயர்ந்துள்ளது.

 

2050-க்குள் பெரும்பாலான நிலமும் கட்டிடங்களும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே 2 தீவுகள் முழுமையாக மூழ்கிவிட்டன.

 

2023-ல் துவாலு அவுஸ்திரேலியாவுடன் ''Falepilli Union Treaty" எனும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

 

இதன்மூலம், ஆண்டுக்கு 280 துவாலு குடிமக்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை, வீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறலாம்.

 

இதன்படி, 2025-ல் முதல் தொகுதியில் தெரிவு செய்யப்பட 9000 துவாலு மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.

 

துவாலுவின் நிலை, காலநிலை மாற்றம் என்பது எதிர்கால பிரச்சினை அல்ல, தற்போதே கண்முன் நடக்கும் பிரச்சினை என்பதை உணர்த்துகிறது. அமெரிக்காவின் பல கடலோர பகுதிகளும் இதேபோல் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன என்பது குறிப்படத்தக்கது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்