Paristamil Navigation Paristamil advert login

வேலையில்லாதோர் காப்பீட்டில் - €2.5 பில்லியன் சேமிக்க திட்டம்!!

வேலையில்லாதோர் காப்பீட்டில் - €2.5 பில்லியன் சேமிக்க திட்டம்!!

9 ஆவணி 2025 சனி 19:44 | பார்வைகள் : 499


வேலையில்லாதோருக்கான காப்பீட்டில் (Assurance chômage) கெடுபிடிகளை அதிகரித்து, அதில் இருந்து €2.5 பில்லியன் யூரோக்களை சேமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் இருந்து 2029 ஆண்டுவரையான காலப்பகுதியில் இந்த தொகையை சேமிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவும், அதற்கான இறுக்கமான மாற்றங்களை கொண்டுவரவும் திட்டங்களை வகுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் காப்பீடு நிறுவனங்களுடன் அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் இடம்பெற்று, இவ்வருட நவம்பர் 15 ஆம் திகதி ஒப்பந்தம் போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்