Paristamil Navigation Paristamil advert login

கேவலமானயூதர்கள் - யூத விரோதமும் கொலை அச்சுறுத்தலும்!

கேவலமானயூதர்கள் - யூத விரோதமும் கொலை அச்சுறுத்தலும்!

9 ஆவணி 2025 சனி 14:10 | பார்வைகள் : 506


 பிரான்ஸின் லியோன் (Rhône) நகரின் 6ஆம் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த தம்பதியினர், யூத விரோத தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்று காவற்துறையின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது மேலும் ஒரு தாக்குதல் சம்பவமாகும். லியோனில், அந்த தம்பதியினர் மீது இருவர் மோசமான யூத விரோத வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திதியுள்ளனர். சம்பவம் இரவு 10.30 மணியளவில் நடந்ததுள்ளது.

Le Progrès பத்திரிகை முதலில் வெளியிட்ட தகவலை உறுதிப்படுத்தியும், அந்த தம்பதியில் ஆண் ஒருவர் யூதர்களின் பாரம்பரியத் தலைக்கவசமான கிப்பா அணிந்திருந்தார். உணவகத்திலிருந்து வெளியேறியபோது, இருவர் அவரை அணுகி, பலமுறை «கேவலமான யூதன்» என்று திட்டியதோடு, வேறு இகழ்ச்சி வார்த்தைகளையும் கொலை மிரட்டல்களையும் விடுத்துள்ளனர். கூடுதலாக, தம்பதியினர் மீது துப்பியதாகவும் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த இரு சந்தேகநபர்களும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

சமூக வலைத்தளம் Xல், Rhône மாவட்ட ஆணையர் இந்தச் சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து, «இது அருவருப்பான செயல்» என்றும், «இத்தகைய செயல்கள் குடியரசுத் தத்துவங்களுக்கு விரோதமானவை» என்றும் குறிப்பிட்டார்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்