Paristamil Navigation Paristamil advert login

வெப்பம் : 28 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!

வெப்பம் : 28 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!

9 ஆவணி 2025 சனி 10:08 | பார்வைகள் : 408


 

இன்று ஓகஸ்ட் 9, சனிக்கிழமை நாட்டின் தெற்கு பகுதி முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

Ain, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Ardèche, Ariège, Aude, Aveyron, Cantal, Charente, Corrèze, Dordogne, Drôme, Haute-Garonne, Gers, Isère, Loire, Haute-Loire, Lot, Lot-et-Garonne, Lozère, Puy-de-Dôme, Hautes-Pyrénées, Rhône, Savoie, Haute-Savoie, Tarn, Tarn-et-Garonne ஆகிய 28 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், ஏனைய தெற்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

34 தொடக்கம் 38°C வரையும், அதிகபட்சமாக 39°C வெப்பமும் பதிவாகும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

அதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை 41°C வரை கடுமையான வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்