யாழில் மர்மக் காய்ச்சலால் மயக்க நிலைக்குச் சென்ற மாணவி மரணம்

9 ஆவணி 2025 சனி 09:34 | பார்வைகள் : 210
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார்.
தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1