இலங்கை ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் - CID-இல் முறைப்பாடு!
8 ஆவணி 2025 வெள்ளி 11:51 | பார்வைகள் : 6828
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரமாக, அவரது சட்டத்தரணியான அகலங்க உக்வத்தே இந்த முறைப்பாட்டை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் இவ்வகை பதிவுகள், ஜனாதிபதியின் தனிமனிதக் கௌரவத்தையும், அரசியல் பிம்பத்தையும் சீரழிக்கும் நோக்கத்துடன் பரப்பப்படுவதாகவும், அவை முழுமையாக பொய்யானவை எனவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பொது தலைவர்களை அவதூறுகளுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் நாடாளுமன்றப் பெரும்பான்மை கொண்ட ஜனநாயக அரசு மற்றும் சமூக நலனுக்கே தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதால், குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan