ஆஸ்திரேலியாவில் அச்சத்தை ஏற்படுத்திய எலி

7 ஆவணி 2025 வியாழன் 13:38 | பார்வைகள் : 863
ஆஸ்திரேலியாவின் யோர்க்ஷயரில் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அங்குள்ள மக்களிடையே பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சுமார் 55 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த எலி அசாதாரணமானது அல்ல என வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அங்கு பரவலாக காணப்படும் எலிகளின் தொல்லைக்கு மத்தியில் இது மற்றொரு பிரச்சினையின் தொடக்கமாகியுள்ளதென என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
எனவே எலிகள் தொடர்பில் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உள்ளூர் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.