Paristamil Navigation Paristamil advert login

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

7 ஆவணி 2025 வியாழன் 11:38 | பார்வைகள் : 767


2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் படி, 22.4 சத வீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூகத்தில் காணப்படும் பல்வேறு காரணங்களால் பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக,  சுகாதார அமைச்சின் உளநல இயக்குநரக குழாமின் பதில் பணிப்பாளர், விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன இதனைத் தெரிவித்தார்.

இதன்போது” கடந்த 2024 ஆம் ஆண்டில், இலங்கையில் பாடசாலையொன்றில்  சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், இதன்போது 22.4 வீதமான பிள்ளைகள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பாக  13-17 வயதுடைய மாணவர்களில்  11.9 வீதமானோர் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவதால் இரவில் தூங்குவதில் சிரமப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  சுமார் 18 வீதமானோர் மனச்சோர்வின் அறிகுறிகளை வெளிக்காட்டியுள்ளனர் எனவும்,  7.5 வீதமானோருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாகவும் விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன குறிப்பிட்டார்.

அத்துடன் 25 வீத பிள்ளைகள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச யாராவது இருப்பதாகவும்  75 வீதமான பிள்ளைகளுக்கு அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் இல்லை எனவும் விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்