ஜப்பானின் கிரோக்ஷிமா - நாகசாகி தாக்குதலின் 80ஆம் ஆண்டு நிறைவு

6 ஆவணி 2025 புதன் 19:09 | பார்வைகள் : 190
உலக வரலாற்றில் அதிபயங்கர தாக்குதல் என வர்ணிக்கப்படும் ஜப்பானின் கிரோக்ஷிமா - நாகசாகி தாக்குதலின் 80ஆம் ஆண்டு இன்றாகும்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது அமெரிக்க விமானம் அணுகுண்டை வீசியது இக்கொடூர தாக்குதலில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தமை உலகை உலுக்கியது.
அமெரிக்காவின் இக்கொடூர தாக்குதலின் கதிர்வீச்சின் தாக்கம் இன்று வரை மக்களை தலைமுறை தலைமுறையாக பாதித்து வருகிறது.
அணுகுண்டு தாக்குதலால் புற்றுநோய் உட்பட பல நோய்களின் பிடியில் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர்.
அணுகுண்டின் கோர முகத்தை உலகிற்கு முதன்முதலாக காட்டிய சம்பவம் இது ஆகும் .
2ஆம் உலகப்போரில் அமெரிக்காவின் பெர்ல் ஹார்பரை ஜப்பானிய படைகள் தாக்கியதன் விளைவே அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டை வீச காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025