Paristamil Navigation Paristamil advert login

கடன் : ஒவ்வொரு நொடியும் €5,000 யூரோக்கள் அதிகரிப்பு!!

கடன் : ஒவ்வொரு நொடியும் €5,000 யூரோக்கள் அதிகரிப்பு!!

6 ஆவணி 2025 புதன் 07:09 | பார்வைகள் : 764


பிரான்சின் கடன் ஒவ்வொரு நொடியும் அதிகரிப்பதாக பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு நொடியும் €5,000 யூரோக்களால் நாட்டின் கடன் அதிகரிப்பதாகவும், 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் (பட்ஜட்) 46 பில்லியன் யூரோக்கள் சேமிப்பதன் அவசியத்தையும் காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் Youtube சனல் ஒன்றில் தொடராக வெளியிட ஆரம்பித்துள்ளார். அதன் முதலாவது பகுதி இன்று ஓகஸ்ட் 5 ஆம் திகதி வெளியானது.

அதில் அவர் இத்தகவலை தெரிவித்தார். பிரான்சின் மொத்த கடன் தற்போது €3.4 ட்ரில்லியன் யூரோக்களாகும்.

இந்த 2025 ஆம் ஆண்டில் அது €8 பில்லியனாலும், 2027 ஆம் ஆண்டில் €10 பில்லியனாலும், €2030 ஆம் ஆண்டில் அது €100 பில்லியனாலும் அதிகரிப்புக்கு உள்ளாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்