ஓர் இந்தியர் இப்படி பேச மாட்டார்! : ராகுலுக்கு உச்சநீதிமன்றம் விளாசல்

5 ஆவணி 2025 செவ்வாய் 09:24 | பார்வைகள் : 174
இந்திய எல்லையில் மிகப் பெரிய பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்து விட்டதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசிய விவகாரத்தில், 'நீங்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறீர்கள். உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்' என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய - சீன எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அவர்களை நம் வீரர்கள் தடுக்க முற்பட்டபோது கைகலப்பு ஏற்பட்டது. அந்த சண்டையில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
அவதுாறு இந்நிலையில், 2022ல் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட காங்., - எம்.பி., ராகுல், சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
குறிப்பாக இந்தியாவின் நிலப்பரப்பில் இருந்து 2,000 சதுர கி.மீ., பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் விமர்சித்திருந்தார்.
ராகுலின் இந்த பேச்சு நம் ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, லக்னோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம் ராகுலை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அடுக்கடுக்காக எழுப்பிய கேள்விகள்:
இந்திய நிலப்பகுதியில், 2,000 சதுர கி.மீ., பரப்பை சீனா ஆக்கிரமித்தது ராகுலுக்கு எப்படி தெரியும்? அப்போது ராகுல் அங்கு இருந்தாரா? ஆக்கிரமிப்பு செய்ததற்கான ஆதாரம் இருக்கிறதா? ஆக்கிரமிப்பை நேரில் பார்த்தாரா? பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? ஒரு உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேசுவாரா?
எல்லையில் ஒரு சண்டை ஏற்பட்டால், இரு தரப்புக்கும் உயிரிழப்பு ஏற்படுவது சகஜம். அந்த நிகழ்வை வழக்கத்திற்கு மாறானது என கருத முடியுமா? தவிர, தேசத்திற்கான ஒரு பிரச்னையை பார்லிமென்டில் பேசாமல், பொதுவெளியில், சமூக ஊடகங்களில் ஏன் எழுப்ப வேண்டும்?
நோட்டீஸ் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி, ''பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இல்லை. ஒருவர் கேள்வியே கேட்கக் கூடாது என்பதற்காக அவரை துன்புறுத்தும் வகையில் தொடர்ச்சியாக அவதுாறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
''எனினும், அதன் மீது நடவடிக்கை எடுக்கும் முன் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவரையும் விசாரிக்க வேண்டும். ஆனால், இவ்வழக்கில் அப்படி நடக்கவில்லை,'' என வாதாடினார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அவதுாறு வழக்கு விசார ணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், இது தொடர்பாக எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025