Paristamil Navigation Paristamil advert login

ஆசியக் கிண்ணம் 2025 அட்டவணை: இந்தியா Vs பாகிஸ்தான் திகதி

ஆசியக் கிண்ணம் 2025 அட்டவணை: இந்தியா Vs பாகிஸ்தான் திகதி

4 ஆவணி 2025 திங்கள் 16:40 | பார்வைகள் : 1802


2025 டி20 ஆசியக் கிண்ணத் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 ஆசியக் கிண்ணத் தொடர் அடுத்த மாதம் 9ஆம் திகதி தொடங்குகிறது.

 

இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டி அபுதாபியிலும், இறுதிப்போட்டி துபாயிலும் நடைபெற உள்ளன.

 

இலங்கை அணி தனது முதல் போட்டியில் வங்காளதேசத்தை செப்டம்பர் 13ஆம் திகதி எதிர்கொள்கிறது.

 

 

அதன் பின்னர் ஹாங் காங், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடனும் இலங்கை அணி மோத உள்ளது.

 

இதேபோல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

 

உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளும் மோதவில்லை என்பதால் ரசிகர்கள் இப்போட்டியை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

 

இந்த அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் திகதி துபாயில் நடைபெற உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்