ஐரோப்பிய தலைநகரங்களை இணைக்கும் 16 யூரோஸ்டார் ரயில்கள் ரத்து!!

4 ஆவணி 2025 திங்கள் 15:55 | பார்வைகள் : 540
Hauts-de-Franceல் மௌஸ்ஸி (Moussy) மற்றும் லொங்கெய்ல் (Longueil) இடையே ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, இன்று காலை 8:30 மணியிலிருந்து அதிவேக ரயில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பரிஸ் மற்றும் லண்டன், ப்ருசெல்ஸ் (Bruxelles), அம்ஸ்டர்டாம் (Amsterdam) ஆகிய நகரங்களை இணைக்கும் 16 யூரோஸ்டார் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல ரயில்கள் தாமதம் அடைந்துள்ளன, சில ரயில்கள் முற்றிலுமாக தங்கள் பயணத்தை நிறுத்தி திரும்பியுள்ளன.
பிக்கார்டி (Picardie) மற்றும் லில்லில் (Lille) பல உள்ளூர் மற்றும் தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தகவலளிக்க SNCF குழுக்கள் பணியாற்றி வருகின்றன.
பழைய வழித்தடங்களின் மூலம் மாற்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பழுது சரிசெய்யும் பணிகள் பிற்பகலில் நடைபெறவுள்ளன, எனவே சேவை இன்று இரவு தானாக முந்தைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025