Paristamil Navigation Paristamil advert login

இனி பாகிஸ்தான் அணி பங்கேற்காது! WCLயில் பாரபட்சம் என குற்றச்சாட்டு

இனி பாகிஸ்தான் அணி பங்கேற்காது! WCLயில் பாரபட்சம் என குற்றச்சாட்டு

4 ஆவணி 2025 திங்கள் 15:40 | பார்வைகள் : 111


உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்தில் நடந்த உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

 

பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 196 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 16.5 ஓவரிலேயே 197 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

 

 

அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இந்தியா மோத இருந்தன. ஆனால், லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்த இந்திய அணி அரையிறுதியில் விலகியது.

 

இதனாலேயே பாகிஸ்தான் அணி அரையிறுதியில் விளையாடாமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

 

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி இனி உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காது என அறிவித்துள்ளது.

 

மேலும் லீக்கில் விளையாட மறுத்த இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் புள்ளிகளை பிரித்து வழங்கி WCL பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்