ஐரோப்பிய கார் சந்தை வீழ்ச்சி: அமெரிக்க சுங்க வரிகளால் பெரும் பாதிப்பு!!

3 ஆவணி 2025 ஞாயிறு 21:25 | பார்வைகள் : 454
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் கார் சந்தை மந்தமாக உள்ளது. ஜூலை மாதத்தில் புதிய கார்களின் பதிவு 7.7% குறைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகின்றன, ஆனால் ஹைப்ரிட் மற்றும் மின்னணு கார்கள் சந்தையை முழுமையாக நிரப்பவில்லை.
தற்போது ஹைப்ரிட் கார்கள் 53% விற்பனையுடன் முன்னிலை வகிக்கின்றன, மின்னணு கார்கள் 17% மட்டுமே விற்கப்படுகின்றன. ரெனோல்ற் (Renault), பூயோ (Peugeot) மற்றும் டொயாட்டா (Toyota) போன்ற பெரிய நிறுவனங்களும் இந்த விற்பனை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா சுங்க வரிகள் மற்றும் சீன கார்களின் போட்டியால் ஐரோப்பிய கார் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis), வோக்ஸ்வாகன் (Volkswagen), மெர்சிடீஸ் (Mercedes) போன்ற நிறுவனங்கள் லாபத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ஜெர்மனியில் மட்டும் 70,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது. ரெனோல்ற் நிறுவனமும் தற்காலிகமாக வேலைவாய்ப்பு நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மின்னணு கார் சந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க, செப்டம்பரில் சமூக லீசிங் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025