ஹமாஸ் வெளியிட்ட காணொளி! - ஜனாதிபதி மக்ரோன் கடும் கண்டனம்!!

3 ஆவணி 2025 ஞாயிறு 20:04 | பார்வைகள் : 591
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு இஸ்ரேலிய கைதிகளின் தற்போதைய நிலை குறித்த காணொளி ஒன்றினை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டிருந்தனர். மிகவும் மெலிந்த தேகத்துடன், எலும்பும் தோலுமாக அவர்கள் காட்சியளிக்கின்றனர்.
குறித்த காணொளியை பார்வையிட்ட உலக தலைவர்கள் பலர் கண்டங்களை வெளியிட்டு வருகின்றனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பிணையக்கைதிகளை பார்க்கும் போது மிகவும் விரக்தி ஏற்படுகிறது.இது கொடுமை. மற்றும் எல்லையற்ற மனிதாபிமானமற்ற செயல். இதுதான் ஹமாசின் உருவகம். காசாவில் இஸ்ரேலியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை காட்டும் புகைப்படங்கள் சகித்துக்கொள்ளக்கூடியதாக இல்லை. இது ஒரு பயங்கரமான நினைவூட்டலாகும் என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிணையக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால், ஓய்வற்ற தாக்குதலை நாம் மேற்கொள்ளுவோம் என இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாஹூ எச்சரித்துள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025