Paristamil Navigation Paristamil advert login

துப்பாக்கி மிரட்டலுடன் SFR கடையில் 40 தொலைபேசிகள் கொள்ளை!!

துப்பாக்கி மிரட்டலுடன் SFR கடையில்  40 தொலைபேசிகள் கொள்ளை!!

3 ஆவணி 2025 ஞாயிறு 19:45 | பார்வைகள் : 1110


மெலனில் (Melun) உள்ள SFR மொபைல் கடையில் ஆகஸ்ட் 2ஆம் திகதி காலை, மூன்று முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுடன் நுழைந்து, பணியாளர்களை மிரட்டி சுமார் 40 தொலைபேசிகளை திருடியுள்ளனர். இதனால் சுமார் €20,000 நிதி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் யாரும் காயமடையவில்லை. 

குற்றவாளிகள் எந்தவொரு வாகனமும் இல்லாமல் நடந்தே தப்பிச்சென்றுள்ளனர். இது நகர மையத்தில், கண்காணிப்பு கேமரா வசதிகள் உள்ள இடத்தில் நடந்துள்ளதால், காவல்துறையினர் வீடியோ பதிவுகளை பயன்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம், ஜூன் 3ஆம் திகதி பொந்தென்-புளோவில் (Fontainebleau) Bouygues மற்றும் Free கடைகளில் நடந்த கொள்ளையை நினைவுபடுத்துகிறது. அப்போது, இருவரும் கண்ணீர் குண்டு மிரட்டலுடன் மொபைல்கள் திருட முயன்றனர். ஆனால் Free கடையில், விற்பனையாளர் தைரியமாக எதிர்த்ததால் கொள்ளையர்கள் வெறுங்கையுடன் தப்பிச்சென்றனர். 

SFR நிறுவனம், சம்பவத்தை கண்டித்து, தங்கள் பணியாளர்களுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்