Paristamil Navigation Paristamil advert login

தீயணைப்பு வீரர்கள் போல் நடித்து 5 லட்சம் யூரோக்கள் கொள்ளை!!

தீயணைப்பு வீரர்கள் போல் நடித்து 5 லட்சம் யூரோக்கள் கொள்ளை!!

3 ஆவணி 2025 ஞாயிறு 16:28 | பார்வைகள் : 566


இன்று காலை சுமார் 7:30 மணிக்கு Neuilly-sur-Seine நகரில் 60 வயதுடைய ஒருவரின்ஸவீட்டிற்குள் போலி தீயணைப்புவீரர் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் புகுந்து, சுமார் 500,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் மற்றும் மணிக்கடிகாரங்களை திருடியுள்ளனர். 

குற்றவாளிகளில் ஒருவர் தீயணைப்பு வீரர்கள்  போல் நடித்து கதவைத் திறக்க செய்துள்ளனர். வீட்டில் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் ஒருவர் இருந்தபோதும், அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. காவல் துறையினர் வழக்கை விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இது போன்ற home-jacking சம்பவங்கள் நொயி பகுதியில் புதிதல்ல. மே மாதத்தில் மூன்று சம்பவங்கள் நடைபெற்றமை குறிப்பிடதக்கது. 

குறும்பருவ வாலிபர்கள் Snapchat வழியாக கொள்ளைக்காக பயிற்சி பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் பணக்காரர்களை இலக்காக்கும் ஒரு புதிய குற்றமுறைதான் என்பதை காட்டுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்