Paristamil Navigation Paristamil advert login

காட்டுக்குத் தீ வைத்த 17 வயது சிறுவன் கைது!

காட்டுக்குத் தீ வைத்த 17 வயது சிறுவன் கைது!

3 ஆவணி 2025 ஞாயிறு 12:26 | பார்வைகள் : 1015


மொன்ட்ப்பொலியே (Montpellier) நகரின் வட பகுதியில் உள்ள Hauts de Massane  என்ற பகுதியில், ஒரு பைன் மரக் காடில் தீவைத்த குற்றச்சாட்டில் 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நேரடியான குற்றச்செயலின் போது (flagrant délit) கைது செய்யப்பட்டதாக, மாவட்ட காவற்துறையினரான DIPN (Direction interdépartementale de la police nationale)  தெரிவித்துள்ளனர்.

தீவைத் தடுக்க வான், தரைப் படைகள் இணைந்தன

தீ பரவத் தொடங்கியதும், அருகில் இருந்த காவற்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்புப் படைகளை தொடர்பு கொண்டனர். தீயை கட்டுப்படுத்த, மூன்று தீயணைப்பு அதிரடிப்படைகள், ஒரு உலங்குவானூர்தி, மற்றும் ஒரு  'Dash' விமானம் ஆகியவை தீவிரமாக ஈடுபட்டன.

 

'விரைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் தீ கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 4,700 சதுர மீற்றர் காடு எரிந்தது.' என தீயணைப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் கைதான இளைஞர், சம்பவம் நடந்த பகுதியில் வசிப்பவர் அல்ல. மேலும் அவர், முன்னரே காவற்துறையின் குற்றப்பட்டியலில் உள்ள நபர் எனவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்படும்போது கடுமையான எதிர்ப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முதல் நாளிலும், அதே பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 100 மீற்றர் தொலைவில் மற்றொரு காட்டுத் தீ ஏற்பட்டிருந்தது. ஆனால், அந்த இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்துப் தெளிவில்லை என்று னுஐPN குறிப்பிட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்