மணமக்களின் உடல், மனநல பிரச்சினைகள்
17 புரட்டாசி 2021 வெள்ளி 06:57 | பார்வைகள் : 15107
அண்மை காலமாக நிறைய விவாகரத்துகள் ஏற்படுகின்றன. அதுவும் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையாகக் கூறாமல், உண்மையை மறைத்து திருமணம் நடத்தி வைத்தால் விவாகரத்து ஏற்படத்தான் செய்யும்.
திருமணத்துக்கு முன்பாக மதம், சாதி, உட்பிரிவு, குடும்ப கவுரவம், வயது, படிப்பு, வேலை, சம்பளம், நிறம், அழகு, உயரம் என பலவற்றையும் பார்க்கிறார்கள். இவற்றில் சில சரியில்லை என்றால் நிராகரிக்கிறார்கள். அதேபோல மணமகன், மணமகளின் உடல்நல, மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, தேவையற்ற சிக்கல்களை தடுக்கும். இதுபற்றி நேரடியாகப் பேசிவிட்டால் பிரச்சினை இல்லை.
உறவு விட்டுப்போகக் கூடாது, சொத்து போகக் கூடாது என்று நடத்தப்படும் நெருங்கிய உறவு திருமணங்களையும் தவிர்க்க வேண்டும். நெருங்கிய சொந்தத்தில் முடிக்கப்படும் திருமணத்தினால் ஏற்படும் நோய்கள் என்னென்ன தெரியுமா?
தலசீமியா, சிஸ்டிக் பைப்ரோஸிஸ், டவுன் சிண்ட்ரோம், பெருமூளை வாதம் (சிபி), காதுகேளாமை, பார்வைக் குறைபாடு போன்றவை முக்கியமானவை. இந்தப் பாதிப்பு உள்ள குடும்பத்தினர் ஆரம்பத்திலேயே மரபணு பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். அதைத் தேவையற்ற ஒன்றாக பார்க்க வேண்டியதில்லை.
இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு இது விநோதமாகவும் அதிசயமாகவும் தெரியலாம். ஆனால், ஆரோக்கியமான குடும்பம் உருவாவதற்கும், விவாகரத்தை தடுப்பதற்கும், வருங்காலச் சந்ததியினரை பிறவி நோய்களிலிருந்து காப்பதற்கும் திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைகள் பெரிதும் உதவும், என்கிறார்கள், மருத்துவம் மற்றும் சட்டத்துறை வல்லுனர்கள்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan