கடைசி பந்தில் ஹோல்டர் அடித்த பவுண்டரி! இரட்டை ஹாட்ரிக் தோல்விகள்..முதல் வெற்றி

3 ஆவணி 2025 ஞாயிறு 11:25 | பார்வைகள் : 408
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் த்ரில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி புளோரிடாவில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்கள் எடுத்தது. ஹசன் நவாஸ் 23 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 40 ஓட்டங்கள் விளாசினார்.
ஜேசன் ஹோல்டர் (Jason Holder) 4 விக்கெட்டுகளும், மோட்டி 2 விக்கெட்டுகளும், ஹொசைன், ஷாமர் மற்றும் சேஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஹோல்டர் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.
அதிகபட்சமாக மோட்டி 28 (20) ஓட்டங்களும், ஷை ஹோப் 21 ஓட்டங்களும் எடுத்தனர். முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளும், சைம் அயூப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ச்சியாக 6 டி20 போட்டிகளில் தோல்வியுற்ற மேற்கிந்திய தீவுகள், தமது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025