என் கண்கள் நன்றாக உள்ளன- ஆனால் உடல் - தோனி கூறிய விடயம்
3 ஆவணி 2025 ஞாயிறு 10:25 | பார்வைகள் : 1271
அடுத்த 5 ஆண்டுகள் விளையாடும் அளவிற்கு கண்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர் கூறியதாக எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
அவருக்கு தற்போது 44 வயதாவதால் அவரின் உடற்தகுதி எந்த அளவிற்கு விளையாட ஒத்துழைக்கும் என்ற கேள்வியும் உள்ளது.
இந்த சூழலில் தனது உடல் குறித்து மருத்துவர்கள் கூறிய விடயத்தை எம்.எஸ்.தோனி பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு, என்னுடைய கண்கள் நன்றாக உள்ளன என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் tickmark கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே" என தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனியின் (M.S.Dhoni) இந்த கூற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், குழப்பத்தையும் ஒருசேர தந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan