பிரான்ஸில் நீச்சல் தளங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு!!
2 ஆவணி 2025 சனி 12:10 | பார்வைகள் : 6289
கடந்த இரண்டு மாதங்களுக்குள், 27 குழந்தைகள் மற்றும் பல இளையவர்களைச்; சேர்த்து 200 பேரிற்கு மேல் பிரான்ஸில் நீர்த்தளங்களில் உயிரிழந்துள்ளனர்.
இதனை எதிர்கொண்டு, தடை செய்யப்பட்ட நீச்சல் பகுதிகளில் நீராடுவதை தவிர்க்கும்படி மாநரசபை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
1ம் ஜூன் முதல் 23ம் ஜூலை வரை, 193 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (பிரான்ஸ் கடற்கரப்புற பகுதிகளில்).
இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஏற்பட்ட 133 உயிரிழப்புகளுடன் ஒப்பிட்டால் 45% அதிகரிப்பு.
அனைத்து வயது குழுக்களிலும் இந்த உயர்வு காணப்படுகிறது.
2024: 15 இளம் உயிர்கள்
2025: 27 இளம் உயிர்கள்
குறிப்பாக 13 முதல் 17 வயதுக்குட்பட்ட இளைஞர்களில், 30% உயிரிழப்பு, மூன்றாண்டுகளிற்கு முன்னர் முன்னர் இதே காலத்தில் 13§ மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்த இடங்கள்
கடல் பகுதியில் : 79
நதிகளில் : 58
பொது நீர்நிலைகளில் : 30
தனிப்பட்ட நீச்சல் குளங்களில் : 24
பாதுகாப்பற்ற மற்றும் கண்காணிக்கப்படாத இயற்கை நீர்நிலைகளில் நீராடும் போது மிகவும் அதிகமான அபாயம் உள்ளது – மதுபானம் அருந்திய பின்னர் இது மேலும் அதிகரிக்கிறது.' என சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலை வெயில்காலங்களில் உயிரிழப்புகள் குறிப்பாக அதிகரிக்கின்றன:*
19 ஜூன் – 6 ஜூலை: 86 உயிரிழப்புகள்
இதே நாட்கள், 2024இல் 36 உயிரிழப்புகள்

























Bons Plans
Annuaire
Scan