கொலைகார சந்தேகநபர் சடலமாக மீட்பு – மனித வேட்டைக்கு முடிவு!

2 ஆவணி 2025 சனி 10:07 | பார்வைகள் : 667
திஜோன் (Dijon) அருகேயுள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் இரண்டு ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர், நேற்றுகாலை முதல் 160 காவற்துறையினரால் தேடப்பட்டு வந்தார். மாலை நேரத்தில், அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தேடலில் திஜோன் GIGN படை மற்றும் வெர்செயில் தேசிய அலகிலிருந்து வந்த மொத்தம் 160 பேரும் தேடுதலில் பங்கேற்றனர்.
சந்தேகநபர் மற்றும் கொல்லப்பட்ட இருவரும் அதே BTP (கட்டுமான) நிறுவனத்தில் பணியாற்றியவர்களே. எந்தவொரு குற்றச்சம்பவ வரலாறும் இதுவரை அவர்களிற்குள் இருந்ததில்லை.
காவல்துறையடூன் முதன்மை ஊகத்தின் படி, இது சக ஊழியர்களுக்கிடையிலான விரோதம் காரணமாகவே நிகழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025