ஆப்பரேஷன் சிந்தூர் உலக வரலாற்றில் ஒரு மைல்கல்: பிரதமர் மோடி உரை

2 ஆவணி 2025 சனி 05:42 | பார்வைகள் : 138
பார்லியில் பிரதமர் மோடி உரை (முதல் பகுதி)
மகாதேவ்!
மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, இந்த அமர்வின் தொடக்கத்திலே ஊடக நண்பர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்த போது அனைத்து மதிப்பிற்குரிய பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைத்தேன்.
பார்லிமென்டின் இந்த அமர்வை இந்தியாவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் அமர்வு என்று அழைப்போம் என்று சொன்னேன். இது இந்தியாவின் புகழை பாடும் அமர்வாகும். நான் வெற்றிக் கொண்டாட்டம் (விஜயோத்சவம்) பற்றி பேசும் போது, இந்த வெற்றித் திருவிழா பயங்கரவாத தலைமையகங்களை தூள்தூளாக்குவது பற்றியது என்று சொல்ல விரும்புகிறேன்.
வெற்றித்திருவிழா
வெற்றித் திருவிழா என்று சொல்லும்போது, இது சிந்தூரின் சந்தை (சிந்தூர் கி சவுகந்த்) நிறைவேற்றுவது பற்றியது என்கிறேன். வெற்றித் திருவிழா என்னும்போது, இது இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் வலிமையின் காவியத்தை கூறுகிறேன்.
வெற்றித் திருவிழா என்று சொல்லும்போது, 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை, மனஉறுதி, அதன் இணையற்ற வெற்றியின் திருவிழா பற்றி பேசுகிறேன். இந்த வெற்றி உணர்வுடன் இந்தியாவின் நிலைப்பாட்டை உலகின் முன் வைக்க நான் இந்த அவையில் நிற்கிறேன்.
இந்தியாவின் நிலைப்பாட்டை பீகார் கூட்டத்தில் இந்தி பேச்சை நிறுத்தி ஆங்கிலத்துக்கு மாறி சில வாக்கியங்கள் பேச என்ன காரணம் தெரியுமா? காணாதவர்களுக்கு இன்று ஒரு கண்ணாடியை தூக்கிக் காட்ட இங்கே நிற்கிறேன்.
மிருகத்தனத்தின் உச்சம்
140 கோடி இந்திய மக்களின் உணர்வுகளுடன் என் குரலை கலக்க நான் வந்துள்ளேன். 140 கோடி இந்தியர்களின் உணர்வுகளின் எதிரோலி, இந்த அவைவில் கேட்டது; அதோடு என் குரலையும் இணைக்கவே நான் இங்கே நிற்கிறேன்.
சிந்தூர் நடவடிக்கையின் போது நாட்டு மக்கள் எனக்கு அளித்த ஆதரவு, எனக்கு அளித்த ஆசீர்வாதங்கள் அபரிமிதமானது. அதற்காக நாட்டு மக்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்களை மனதார பாராட்டுகிறேன். ஏப்ரல் 22ம் தேதி அன்று பகல்ஹாமில் நடந்த கொடூர சம்பவம் எவராலும் மறக்க இயலாதது.
மண்டியிட...!
பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை துப்பாக்கி முனையில் மண்டியிட செய்து, அவர்களின் மதம் எது வென்று கேட்டு அடையாளம் தெரிந்து சுட்டுக் கொன்றது மிருகத் தனத்தின் உச்சம்.
இது இந்தியாவை வன்முறையின் தீயில் தள்ளுவதற்காக திட்டமிட்டமிட்டு எடுத்த முயற்சி. இது இந்தியாவில் கலவரங்களை தூண்டும் ஒரு சதி. இன்று, தமது ஒற்றுமையால் அந்த சதியை முறியடித்த இந்திய மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஆங்கிலத்தில் பேசியது ஏன்?
ஏப்ரல் 22க்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்தியில் பேசும்போது, வேண்டுமென்றே சில ஆங்கில வாக்கியங் களை உலகம் முழுமைக்கும் அந்த செய்தி போய் சேரவேண்டும் என்பதால் அவ்வாறு ஆங்கிலத்தில் பேசினேன்.
அதாவது இந்த படுபாதக செயலை இந்த மண்ணில் நிகழ்த்திய கொடூர பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கும் தப்பி ஓடினாலும், விடாமல் வேட்டையாடி அவர்கள் அத்தனை பேரையும் அழித்தொழித்து மண்ணோடு மண்ணாக்காமல் ஓயமாட்டேன் என்று சபதம் செய்தேன்.
கொலை செய்த பயங்கரவாதிகளை மட்டுமல்ல; பின்னால் இருந்து அவர்களதுமூளையாக செயல்பட்டவர்களும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது; அது சாதாரண தண்டனையாக இருக்காது, எவருடைய கற்பனைக்கும் எட்டாத தண்டனையாக இருக்கும் என்றும் மொத்த உலகத்துக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பகிரங்கமாக அறிவித்தேன்.
சம்பவம் நடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று தான் வெளிநாட்டில் இருந்தேன். தகவல் கிடைத்ததும் நிகழ்ச்சி அனைத்தையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக நாட்டுக்கு திரும்பி வந்தேன்.வந்த உடனே கூட்டத்தை ஒரு கூட்டத்தை கூட்டினேன். பயங்கரவாதத்துக்கு கடுமையான பதிலடி கொடுத்தாக வேண்டும் என்றும், இது நமது நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வு என்பதை அந்த கூட்டத்தில் பிரகடனம் செய்துவிட்டு சில தெளிவான அறிவுரைகளை வழங்கினேன்.
ராணுவத்துக்கு முழு அனுமதி
நமது ராணுவத்தின் திறன்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்களின் தைரியம் மீது நம்பிக்கை உள்ளது. எனவே, ராணுவம் சுதந்திரமான நடவடிக்கை எடுக்க முழு அனுமதி வழங்கப்பட்டது. எப்போது, எங்கே, எப்படி, எந்த விதமான நடவடிக்கை எடுப்பது என்பதை அவர்களே முடிவு செய்ய அனுமதி வழங்கினோம். அந்த கூட்டத்தில் இதெல்லாம் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் மிகவும் தெளிவாக கூறப்பட்டது.
அங்கே பேசப்பட்ட சில விஷயங்கள் சில ஊடங்களிலும் செய்தியாக வந்திருக்கலாம். எப்போது, எங்கே, எப்படி, எந்த நமது ராணுவம் அந்த பொறுப்பை முழுவதுமாக ஏற்று, பயங்கர வாதிகளுக்கு தண்டனை வழங்கியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
நமது ராணுவம் வழங்கிய தண்டனை எப்படிப்பட்டது என்றால், அதை அனுபவித்த பின்னர் இன்று வரையிலும் அந்த பயங்கரவாத கும்பல்களின் எஜமானர்கள் தூக்கம் தொலைந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றியின் ஐந்து முகங்கள்
நமது ராணுவத்தின் வெற்றியை குறித்த இந்தியாவின் கருந்தோட்டத்தை இந்த சபையின் மூலமாக நாட்டு மக்களுக்கு முன் வைக்க விரும்புகிறேன். இந்த வெற்றியின் ஐந்து முகங்கள் குறித்து மக்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.
முதல் அம்சம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கும் என்பதை பாகிஸ்தான் ராணுவம் ஏற்கனவே உணர்ந்திருந்தது. அதனால் அவர்கள் தரப்பில் இருந்து அணு ஆயுத தாக்குதல் பற்றிய அறிக்கைகளும் பேட்டிகளும் வரத் தொடங்கின.
ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமது ராணுவம் மே 6 இரவு மற்றும் மே 7 காலையில் நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானால் எதுவுமே செய்ய முடியவில்லை. வெறும் 22 நிமிடங்களில், இந்திய ராணுவம் ஏப்ரல் 22க்கு பழிக்குப்பழி வாங்கியது.
இரண்டாவது அம்சம் என்னவென்றால், இது பாகிஸ்தானுடன் நடந்த பெரிய போர் அல்ல! என்றாலும் இதற்கு முன்னர் போக நினைத்திராத, முயன்றிராத இடங்கள் வரையிலும் போய் பார்த்துவிடுவது என்ற தெளிவுடன் இந்தியா எடுத்த முதல் வியூகம் இது தான்.
திட்டமிட்டபடி, இதுவரை எட்டியும் பார்க்காத இடங்களுக்கு சென்றோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு மூலையிலும் இருந்த பயங்கரவாத முகாம்கள் தகர்த்து தரைமட்டமாகி புகை மண்டலமாக மாற்றப்பட்டன.
அங்கிருந்த பயங்கரவாத பதுங்கு குழிகள் அருகில் செல்ல யாரும் கற்பனைகூட செய்திருக்க முடியாது என்று கூறப்பட்ட இடங்கள் எதையும் நமது மற்றும் முரிட்கே ஆகியவை தகர்த்து தரையோடு தரையாக ஆக்கப்பட் டன. நமது ராணுவம் பயங்கரவாத முகாம்களை துல்லியமாக குறி வைத்து தாக்கி அழித்தன.
மூன்றாவது அம்சம் என்னவென்றால், பாகிஸ்தானின் அணுகுண்டு மிரட்டல் வெறும் பூச்சாண்டி என்பதை உலகத்துக்கு நாம் நிரூபித்து காட்டினோம். அணு ஆயுத மிரட்டல் இனி எடுபடாது என்பதையும். காட்டினோம். அணுஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது என்பதையும் உலக அரங்கில் சந்தேகத்துக்கு இடமின்றி இந்தியா நிரூபித்தது.
நான்காவது அம்சம், மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, இந்தியா தனது சொந்த தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி, பாகிஸ்தானின் நெஞ்சில் துல்லியமாக தாக்கி பெரும் வலியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் விமானப்படை தளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இன்றும் கூட அவர்களின் பல விமானப்படை தளங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன.
தொழில்நுட்பம் சார்ந்த போர்களுக்கான காலம் மலர்ந்துவிட்டது. அந்த புதுவகை போர்த்திறமையிலும் இந்தியா முன்னணியில் நிற்பதை ஆப்பரேஷன் சிந்தூர் இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நாம் செய்த முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டிருந்தால், இந்த தொழில்நுட்ப போர் காலத்தில் நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் நமது சாதனை புரியும்.
ஐந்தாவது அம்சம் என்னவென்றால், 'ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த போது தான் ஆத்மநிர்பர் பாரத் என்கிற தற்சார்பு இந்தியாவின் வலிமையை உலகம் முதல் முறையாக பார்த்தது. மேட் இன் இந்தியா ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத பலவீனங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.
தேடி வந்து அடித்து தூக்குவோம்!
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராணுவ பாதுகாப்பு பணிகளை கவனித்து கொண்டிருந்தவர், என்னை சந்திக்க வந்தார். நான்
முப்படைகளின் கூட்டு தளபதி என்கிற சிடிஎஸ் பதவி உருவாக்கத்தை அறிவித்ததற்காக அவர் மிக மிக மகிழ்ச்சி அடைத்தார்.
அவர் கணித்தது போலவே, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது கடற்படை, தரைப்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளின் கூட்டு நடவடிக்கையும், அவற்றுக்கிடையிலான ஒருங்கிணைப்பும் பாகிஸ்தானை நடுநடுங்க வைத்தது. இதற்கு முன்பும் நமது நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அப்போதெல்லாம், பயங்கரவாதிகளை பின்னால் இருந்து இயக்கும் சூத்ரதாரிகள் கவலைப்பட்டது இல்லை.
தங்களை எவராலும் தேடி கண்டுபிடிக்க முடியாது என்ற நம்பிக்கையில், அவர்கள் அடுத்த தாக்குதலுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருந்தனர். அந்த நிலை இப்போது மாறிவிட்டது. இப்போது, ஒரே ஒரு தாக்குதல் நடந்தாலும், அதன் சூத்ரதாரி அதற்கு பிறகு தூங்க முடியாது.
எங்கே ஓடி ஒளிந்தாலும் இந்தியா தேடி வந்து அடித்து தூக்கும் என்று அவர்களுக்கு இப்போது நன்றாக தெரியும். இதுதான் இத்தியாவின் புதிய நார்மல், மாறிவிட்ட மாமூல் நிலை, என்பது இப்போது ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் உறைக்கிறது. உலகத்துக்கும் புரிகிறது.
இந்தியாவின் சிவப்பு கோடுகள்
நமது நடவடிக்கையில் நோக்கம் என்ன, என்பதை உலகம் பார்த்தது. சிந்தூர் முதல் சிந்து நதி வரை பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் அதை செய்தவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பின்னால் நிற்கும் சூத்ரதாரிகளும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தானுக்கு இப்போது புரிந்திருக்க வேண்டும்.
ஒரு குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டு, ஒரு நாசவேலையை செய்துவிட்டு ஹாயாக கைவீசி நடந்து போய்விடலாம், கடந்துபோய்விட லாம் என்கிற பழைய கதை இனி மேல் எடுபடாது. இது வேறுமாதிரி இந்தியா.
ஆப்பரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா மூன்று சிவப்பு கோடுகளை வரைந்திருக்கிறது.
* இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நாங்கள் எங்கள் வழியில் எங்கள் விதிகளின்படி, நாங்கள் தேர்வு செய்யும் நேரத்தில் பதிலடி கொடுப்போம்.
* அணுகுண்டு மிரட்டலும் இனி எடுபடாது.
* பயங்கரவாதிகளுக்கு ஆதரவான அரசாங்கத்தையும், பயங்கரவாத கும்பல்களின் தலைவர்களையும் தாங்கள் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம். இந்தியாவின் பார்வையில் இவர்கள் இருவரும் ஒன்று தான்.
எனது நாட்டின் வீரர்களுக்கு, அவர்களின் வீரத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஏப்ரல் 22ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு, மூன்று நான்கு நாட்களில் அவர்கள் எகிறி குதித்து, '56 இன்ச் மார்பு எங்கே போனது? மோடி எங்கே தொலைந்து போனார்? மோடி தோற்றுவிட்டார் என்று பேச ஆரம்பித்தார்கள்.
அந்த தருணத்தை அவர்கள் நன்றாகவே ரசித்தார்கள். ''ஆஹா நாம் வெற்றி பெற்றுவிட்டோம்' என்று நினைத்தார்கள். நமது ராணுவம் சொன்னதையே நம்பாதவர்களை என்ன சொல்லி, யார் நம்ப வைப்பது என்பதுதான் சவால்.
பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட துயரத்தில் கூட அவர்கள் தங்கள் அரசியலை தேடினார்கள். தங்கள் சுயநல அரசியலுக்காக என்னை இலக்காக எடுத்து கொண்டார்கள்.அதல் எனக்கு வருத்தமில்லை. ஆனால் அவர்களின் அறிக்கை தமது ராணுவத்தின் மன உறுதியை சீர்குலைத்தது.
(ராகுல் குறுக்கிட்டு காட்டமாக ஏதோ சொல்லி ஆட்சேபிக்கிறார். அவரை நோக்கி பிரதமர் பேசுகிறார்) மதிப்பிற்குரிய எதிர்கட்சி தலை வர் அவர்களே, ஒரு நிமிடம், ஒரு நிமிடம். உங்கள் நீண்ட பேச்சை எல்லோரும் கவனமாக கேட்டார் கள். ஆனால் நீங்கள் மட்டும் மற்ற வர்கள் பேச்சில், அதுவும் உட்கார்ந்தபடியே குறுக்கீடு செய்வது உங்களுக்கு உங்கள் பதவிக்கு பொருத்தமாக இருக்குமா?
சபாநாயகர் அவர்களே, இவர்களுக்கு இந்தியாவின் பலத்தின் மீது நம்பிக்கை இல்லை, இந்திய ராணு வத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. அதனால்தான் தொடர்ந்து 'ஆப்பரேஷன் சிந்தூர்' குறித்து கேள்வி எழுப் புகிறார்கள். இப்படி செய்வதன் மூலம் ஊட கங்களில் தலைப்பு செய்திகளில் பெயர் வரலாம். ஆனால் நாட்டு மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க முடியாது.
மே 10 அன்று, 'ஆப்பரேஷன்சிந்தூர்' தாக்குதலை நிறுத்துவதாகஇந்தியா அறிவித்தது. அதைபற்றி இங்கே பலவிதமானவிஷயங்கள் பேசப்பட்டன. இது எல்லாமே பாகிஸ்தான் செய்யும் பிரசாரத்தில் கூறப்படும் அதே விஷயங்கள் தான். இந்திய ராணுவம் வெளிப்படையாக சொல்லி வந்த உண்மைகளை ஏற்பதற்கு மனமில்லாமல், இப்படி அப்பட்டமாக பாகிஸ்தானின் பொய்களை அவர்களுக்காக பரப்புவது சிலரது வேலையாக இருக்கிறது.
சில விஷயங்களை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பாலக்கோடு விமானதாக்குதல் நடந்தபோதும், நாம் பதிலடி கொடுத்தோம். பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களை அழிப்பது அன்று நமது இலக்காக இருந்தது, அதை செய்து காட்டினோம். அதே மாதிரி தான், 'ஆப்பரேஷன் சிந்தூர்' விஷயத்திலும் சரியான இலக்குகளை நாம் நிர்ணயம்செய்தோம்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத்தின் மையப்புள்ளி எது என்பதை கண்டுபிடித்து அழிப்பது, பஹல்காம் பயங்கரவாதிகள் எந்த இடங்களில் உட்கார்ந்து சதி திட்டம் தீட்டினார்களோ, அந்த இடங்களையும், அதற்காக அவர்கள் பயிற்சி பெற்ற இடங்களையும், நிதி, தொழில்நுட்ப உதவி, ஆயுதங்களை பெற்ற இடங்களையும் தாக்கி அழிப்பது தான் நமது குறிக்கோள். அவைதான் நமது இலக்குகள்.
பாலக்கோடு தாக்குதலுக்கு பதிலடிகொடுத்ததை போலவே, இந்தமுறையும் அந்த இடங்களை எல்லாம் கண்டறிந்து, நமது ராணுவம் தனது இலக்குகளை 100சதவீதம் துல்லியமாக தாக்கி அழித்து வெற்றி கண்டது. அந்த நடவடிக்கை மொத்தமும் மே 6ம் தேதி இரவு மற்றும் மே 7ம் தேதி அதிகாலையில் நடந்து முடிந்தது. மே 7 காலையில், சர்வதேச செய்தியாளர் கூட்டத்தில் இந்திய ராணுவம் இந்த விவரங்களை தெரிவித்தது.
பயங்கரவாதிகளை, பயங்கரவாதத்தின் தலைவர்களை, பயங்கரவாத அமைப்புகளை, அவர்களின் தளங்களை அழிப்பதே நமது இலக்கு, நமது குறிக்கோள், நமது நோக்கம் என்பதை அதற்கு முந்தைய நாளே நமது ராணுவம் அனைத்து செய்தியாளர்கள் முன்னிலையிலும் தெளிவாக அறிவித்து இருந்தது.
அதன்படி ராணுவம் கச்சிதமாக வேலையை முடித்த காரனத்தால், மே 7ம் தேதி செய்தியாளர்கள் கூட்டத்தில் நமது ராணுவ அதிகாரிகள், “நாங்கள் எங்கள் வேலையை முடித்துவிட்டோம்”என்று அறிவித்தனர். அதாவது, என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விரிவாக பேசி தீர்மானித்து இருந்தோமோ, அந்த பணிகளை விரைவாகவே முடித்து விட்டோம்.
அந்த வெற்றிகரமான நடவடிக்கைக்கு பிறகு, நமது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் என்ன சொன்னாரோ, அதை இங்கே நான் மீண்டும் சொல்கிறேன். 'ஆப்பரேஷன் சிந்தூர்' முடிந்த சில நிமிடங்களில், அந்த செய்தியை உலகத்துக்கு அறிவித்தோம். பாகிஸ்தானுக்கும் சேர்த்து தான் அந்த செய்தியை சொன்னோம்.
அதாவது, “இதுதான் எங்கள் இலக்கு, இதை நாங்கள் முடித்துவிட்டோம்” என்று செய்தியாளர்கள் சந்திப்பு மூலமாக பாகிஸ்தானுக்கும் சேதி அனுப்பினோம். நமது ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அதை தெரிவித்தது. பாகிஸ்தான் தலைவர்களுக்கும் நிலவரம் தெரியட்டும், அவர்களது மனதில் என்ன ஓடுகிறது என்று நமக்கும் தெரியட்டும் என்று நினைத்தோம்.
பாகிஸ்தானுக்கு கொஞ்சமாவது அறிவு இருந்திருந்தால், அதோடு அமைதியாகி நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள். பயங்கரவாதிகளுடன் பகிரங்கமாக துணைநிற்கும் தவறை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் வெட்கமில்லாமல் பயங்கரவாதிகளுடன் துணைநிற்க முடிவு செய்தனர். அப்படி ஒரு திருப்பம் வரக்கூடும் என்பதையும் முன்னரே நாம் கணித்து, அதற்கும் தயார் நிலையில் தான் இருந்தோம்.
நமது ராணுவம் தயாராக இருந்தது. அடிப்பதற்காக காத்திருந்தாலும், “எங்கள் இலக்கு பயங்கரவாதம் மட்டுமே, பாகிஸ்தான் ராணுவமோ அரசாங்கமோ அல்ல” என்று உலகத்துக்கு சொல்லிக் கொண்டிருந்தோம். பயங்கரவாதிகளுக்கு உதவுவது என்று முட்டாள் தனமாக ஒரு முடிவு எடுத்து, இந்தியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்து களத்தில் இறங்க முயன்ற போது, இதற்கு மேலும் காத்திருக்க கூடாது என்று இந்தியராணுவம் சிலிர்த்து எழுந்தது.
மண்டியிட்டது பாகிஸ்தான்
காலாகாலத்துக்கும் பாகிஸ்தான் மறக்க முடியாத பதிலடியைகொடுத்தது இந்தியா. மே 9 ம்தேதி நள்ளிரவு மற்றும் மே10 ம்தேதிகாலையில், நமது ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து சென்று, பாகிஸ்தான் ஒருபோதும் கற்பனை செய்திராத வகையில், கடுமையான தாக்குதலை நடத்தியது.
நாலா திசையிலும் நமது ஏவுகணைகளும் டிரோன்களும் பாய்ந்து பாய்ந்து கொடுத்த அடிதாங்காமல் மண்டியிட்டது பாகிஸ்தான். டெலிவிஷன்திரைகளில் உலகமே பார்த்தது. பாகிஸ்தான்மக்கள், 'ஓ, நான் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தேன்,' என்று ஒருவர் சொன்னார், மற்றொருவர், 'நான் அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்தேன்'என்றார். “நாங்கள் எதையும் யோசிப்பதற்குள் இந்தியா தாக்குதல் நடத்தியது' என்றார் இன்னொருத்தர்.
இந்தியா இப்படி அதிரடியாக தாக்கும்; அதுவும் பல இடங்களில் ஒரேநேரத்தில் என்று பாகிஸ்தான் நினைக்கவே இல்லை. அதை அவர்கள் கற்பனை கூட செய்ததில்லை. அப்போது தான் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல், DGMO, டெலிபோனை எடுத்து நம்முடைய தளபதிக்கு கால்போட்டார்.
“அய்யோ, போதும்நிறுத்துங்கள். இந்தஅடியேபோதும். இதற்கு மேல் அடிதாங்கஎங்களுக்கு சக்தி இல்லை” என்று பாகிஸ்தான் தளபதி நமது தளபதியிடம் கெஞ்சினார்.
நம்மாள் சொன்னார், “நாங்கள் தான் முதல் நாளே சொன்னோமே. எங்கள் இலக்கு இதுதான் என்று. அதன் பிறகு, எங்கள் வேலை முடிந்தது என்பதையும் அறிவித்தோம். அதோடு நீங்கள் வாயை பொத்திக் கொண்டு போயிருந்தால் பிரச்னை வந்திருக்காது. மறுபடியும் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து வாலாட்ட பார்த்தீர்கள். அதனால் தான் இந்த அடி” என்று.
இந்தியாவின் சாதனையை இதுவரை எவரும் சொல்லாத விதத்தில் விவரித்து கூறி உணர்ச்சி பொங்க அலசுகிறார் பிரதமர் மோடி.
அடித்தோம்; செய்து முடித்தோம்!
இன்று நான் மீண்டும் சொல்கிறேன். இது தான் இந்தியாவின் தெளிவான கொள்கை. இது நன்றாக சிந்தித்து, ஆழ்ந்து விவாதித்து வகுக்கப்பட்ட கொள்கை. ராணுவத்துடன் சேர்ந்து பேசி நிர்ணயித்த கொள்கை. அதாவது, நமது இலக்கு இன்னொரு நாடோ அதன் ராணுவமோ அதன் அரசாங்கமோ அதன் மக்களோ அல்ல.
பயங்கரவாதம், பயங்கரவாதிகள், அவர்களின் வசிப்பிடங்கள், பயிற்சி தளங்கள் மட்டுமே நமது இலக்கு. இதை முதல் நாளிலேயே செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கவும் செய்தோம்.
பாகிஸ்தானுடன் போர் தொடுப்பதோ, மேலும் மேலும் அதை பெரிதாக்குவதோ எங்கள் எண்ணம் கிடையாது என்று சொன்னோம். எந்த இலக்கை நாம் நிர்ணயம் செய்தோமோ, அதை அடைந்ததும் தாக்குதலை நிறுத்திவிட்டோம். சொல்லிஅடித்தோம்; செய்துமுடித்தோம். பிறகும்வாலாட்டமுயன்றார்கள்; வாலைநறுக்கிவிட்டோம். இவ்வளவுதான்கதை.
யார் யாரோ இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்ததால் ஆப்பரேஷன் சிந்தூரை நாம் நிறுத்தியதாக எதிக்கட்சியினர் புரளி கிளப்புகின்றனர். உலகின் எந்த நாட்டு தலைவரும் இது சம்பந்தமாக என்னிடம் பேசவும் இல்லை, இந்தியாவை நடவடிக்கையை நிறுத்தவும் சொல்லவில்லை . மே 9ம் தேதி இரவு, அமெரிக்க துணைஅதிபர் என்னிடம் பேச முயற்சி செய்தார். ஒரு மணி நேரம் முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ராணுவத்துடன் ஒரு கூட்டத்தில் இருந்ததால், அவருடையஅழைப்பைஏற்கவில்லை. கூட்டம் முடிந்த பின் அவரை அழைத்தேன். 'மூன்று நான்கு முறை உங்கள் கால்வந்தது. என்னவிஷயம்?” என்றுகேட்டேன். “இந்தியா மீது மிகப்பெரிய தாக்குதலை பாகிஸ்தான் நடத்தப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது”என்று அவர் என்னிடம் சொன்னார்.
பாகிஸ்தானின் நோக்கம் அதுவாக இருந்தால், அதற்கு அவர்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று நான் பதில் சொன்னேன். அமெரிக்காவிடம் இந்தியா சொன்ன பதில் இதுதான். புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு இந்த பதில் புரியாது. அதோடு இன்னொரு வாக்கியமும் அமெரிக்க துணை அதிபரிடம் சொன்னேன். “வீவில் ஆன்சர் புல்லெட்ஸ்வித் பாம்ஸ்” என்று சொன்னேன். துப்பாக்கி ரவைகளுக்கு வெடிகுண்டுகளால் பதில் சொல்வோம்” என்றேன்.
இது நடந்தது மே 9 ம் தேதி இரவு. அதே இரவில் தொடங்கி அதிகாலைக்குள் நமது ராணுவம் பாகிஸ்தானின் ராணுவ சக்தியை துவம்சம் செய்தது. இன்று வரை அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. இதுதான் எங்கள் மனஉறுதி. இன்று பாகிஸ்தானுக்கும் இது புரிந்திருக்கும். 'இன்றைய இந்தியா மிகவும் வலிமையானது. நாம் அடிக்க முயன்றால், ஒன்றுக்கு பத்தாக திரும்பபெற நேரிடும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை உருவானால், இன்னும் எத்தனையோ மடங்கு அதிகமாக இந்தியாவின் சீற்றத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும்' என்று நிச்சயமாக பாகிஸ்தான் புரிந்து கொண்டிருக்கும்.
ஆகையால், ஜனநாயகத்தின் கோயிலான இந்தசபையில் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்: 'ஆப்பரேஷன் சிந்தூர்' முடியவில்லை, தொடர்கிறது. பாகிஸ்தான் அசட்டு துணிச்சலில் மறுபடியும் வம்புக்கு வந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.
இன்றைய இந்தியா தன்னம்பிக்கை நிறைந்த நாடு. இன்றைய இந்தியா தற்சார்பு மந்திரத்தை ஏற்றுக்கொண்டு முழுபலத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. நாடு தற்சார்பு அடைவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், காங்கிரஸ் கட்சிகுரல் கொடுக்க பிரச்னைகள் கிடைக்காமல், அதற்காக பாகிஸ்தானை சார்ந்திருக்க தொடங்கிவிட்டதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025