Paristamil Navigation Paristamil advert login

நெத்திலி கருவாட்டு துவையல்

நெத்திலி  கருவாட்டு துவையல்

1 ஆவணி 2025 வெள்ளி 14:26 | பார்வைகள் : 123


நெத்திலி மீன் மீனை விட கருவாட்டிற்கு தான் மவுசு அதிகம். இதில் குழம்பு வைத்து பொறித்து சாப்பிட என சுவை நன்றாக இருக்கும். வித்தியாசமாக துவையல் செய்வது போல் நெத்திலி துவையல் சமச்சு சாப்பிட்டு பாருங்க சின்ன பசங்க, பெரியவங்க எல்லாரும் அடிட் ஆகிடுவாங்க

தேவையான பொருட்கள்: நெத்திலி கருவாடு, காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு, உளுத்தம்பருப்பு, சின்ன வெங்காயம், கடுகு, வெள்ளை பூண்டு, புளி.

செய்முறை: நெத்திலி மீனை நன்றாக கழுவிக்கொண்டு, இரண்டு முறை சுடு தண்ணீரில் நன்றாக அலசவும், அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்த்தும், உளுத்தம்பருப்பு, கடுகு, மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி தாளிக்கவும்.

இதன்பின் சின்ன வெங்காயம் மற்றும் வெள்ளை பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி, வாணலில் போட்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து புளி கரைசலை ஊற்றிக் கொள்ளவும்.

இதில் நெத்திலி கருவாட்டினை கொட்டிவிட்டு நன்கு வேகும் வரை வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேரந்து துவையல் ஆகும் வரை வதக்கி எடுத்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடித்து எடுத்தால் சத்தான சுவையான நெத்திலி கருவாடு துவையல் தயார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்