Paristamil Navigation Paristamil advert login

பருவகால தடிமன் காய்ச்சல - பாதுகாப்பற்ற பிரான்ஸ் - அமைச்சரின் கருத்து!:

பருவகால தடிமன் காய்ச்சல - பாதுகாப்பற்ற பிரான்ஸ் - அமைச்சரின் கருத்து!:

1 ஆவணி 2025 வெள்ளி 12:16 | பார்வைகள் : 2323


பருவகால தடிமன் காய்ச்சல் (Grippe saisonnière) பரவும் இந்நேரத்தில், பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சிடம் இணைப்புத் தலைவராகப் பணியாற்றும் யானிக் நியூடர் (Yannick Neuder), மருத்துவர்களில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது 'கவலைக்குரியது' எனக் கூறியுள்ளார்.

மொத்தம் 20% மட்டுமே மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பதைக் கண்டு அவர் கவலையுடனும் பதற்றத்துடனும் பேசியுள்ளார்.

'தடுப்பூசிகளின் தந்தை பஸ்தரின் நாடு, அறிவொளியின் நாடு என அழைக்கப்படும் பிரான்சில், மருத்துவ பணியாளர்களில் 20% பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே அசாதாரணமான விடயம்தான்', என அவர்  வலியுறுத்தினார்.

'பல தொற்றுகள் மீண்டும் அதிகமாகத் திரும்பி வருகின்றன' – உதாரணமாக மொரோக்கோவில் காமாலை (rougeole) பரவல்,

பிரான்சில் méningite எனப்படும் மூளைக்காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட 60க்கும் மேற்பட்ட மரணங்கள்'

'நாம் பொதுசுகாதாரக் கருத்துக்களை வலியுறுத்த வேண்டிய நேரமிது, குறிப்பாக மருத்துவர்களாக இருந்தால்', என்றும்

'தடுப்பூசிக்கு எதிரான எண்ணங்களை மாற்ற சிறந்த விளக்கங்கள் தேவை', என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் பருவகாலக் காய்ச்சல் சம்பவங்கள் உலகளவில் பதிவாகுகின்றன.
அதில் 3 முதல் 5 மில்லியன் வரை தீவிர நோயளிகளாக இருக்கின்றனர்.


65-85 வயதினருக்கான தடுப்பூசி பெறுபவர்களின் விகிதம்:
பிரான்ஸ் மையபகுதியில்: 65.1%
குவாதிலூப்: 37.2%
மார்தினிக்: 26.2%M
கயானா: 37.5%
ரீயூனியன்: 39.4%

அனைத்து சுகாதார பணியாளர்களும் – அரசு, தனியார், அல்லது சிகிச்சை மையங்களில் பணிபுரிபவர்கள் – தாங்கள் முன்னுதாரணமாக தடுப்பூசி போட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

'ஒரு நோயாளியாக இருக்கும்போது, உங்களைக் கவனிக்கும் மருத்துவர் தடுப்பூசி போட்டிருக்கிறார் என்பதே உங்களுக்கு நிம்மதியாக இருக்கும்', என அவர் குறிப்பிட்டார்.


சுகாதார மற்றும் குடும்பத்துறை தொழிலாளர் அமைச்சரான  கேதரின் வோற்றான் (Catherine Vautrin) வயோதிபர் பேணல் மையங்களான EHPAD-இல் வசிக்கும் முதியவர்களுக்குத் தடுப்பூசியை கட்டாயமாக்க விரும்புகிறார்.

'இப்போதும் EHPAD-இல் தடுப்பூசி பெறுவோர் சுமார் 85§ இருப்பதால், அது கட்டாயமாக்கப்பட்டால் கூட அதிக முன்னேற்றம் நடக்கும் என நிச்சயமில்லை', என்றார்.

'இது மிகவும் பரிந்துரைக்கப்படும் செயல். EHPAD-இல் இருப்பவர்கள் முதியவர்கள், பலருக்கும் பிற நோய்கள் உள்ளன, மேலும் அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் – இங்கு அனைத்து ஆபத்துகளும் ஒருசேரக் குவிகின்றன எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வருடா வருடம் 40 வயதிற்கு மேல் அனைவரிற்கும் இந்தத் தடுப்பூசிகள், தேசிய மருத்துவக் காப்புறதியினால் இலவசமாக வழங்கப்படுகின்றது. அனைவரும் இதனைப் பயன் படுத்திக் கொள்வது ஆபத்தினைக் குறைக்கும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்