ட்ரம்பின் மிரட்டலால் தீவிரமான தாக்குதல் - 16 பேர் பலி

1 ஆவணி 2025 வெள்ளி 09:45 | பார்வைகள் : 306
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மிரட்டலுக்குப் பிறகு உக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் தலைநகர் கீவ்-வின் பல பகுதிகளில் நேற்றிரவு (31) முழுவதும் 309 ட்ரோன்கள் மற்றும் 8 குரூஸ் ஏவுகணைமூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 16 பேர் கொல்லப்பட்டதோடு மற்றும் 155 பேர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்களில் 12 குழந்தைகளும் அடங்குவர் என கியேவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே டொனெட்ஸ்கின் முக்கிய கிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான நகரமான சாசிவ்வைக் கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் ரஷ்யா மீது 100 வீதம் வரி விதிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025