தலையால் முட்டி மின்னல்வேக கோல்! போர்னேமௌத் அணியை பந்தாடிய மான்செஸ்டர் யுனைடெட்

1 ஆவணி 2025 வெள்ளி 07:45 | பார்வைகள் : 140
பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் Bourmouthஐ வீழ்த்தியது.
அமெரிக்காவின் Soldier Field மைதானத்தில் நடந்த, பிரீமியர் லீக் சம்மர் சீரிஸ் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் போர்னேமௌத் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் யுனைடெட் வீரர் ரஸ்மஸ் ஹோஜ்லண்ட் (Rasmus Hojlund) தாவி தலையால் முட்டி அபார கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து சக அணி வீரர் பேட்ரிக் டோர்கு (Patrick Dorgu) 25வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியில் யுனைடெட் அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியிலும் யுனைடெட் அணியே ஆதிக்கம் செலுத்தியது. 53வது நிமிடத்தில் யுனைடெட் வீரர் அமத் டியல்லோ (Amad Diallo) கோல் அடித்தார்.
அடுத்து ஈத்தன் வில்லியம்ஸ் (Ethan Williams) 72வது நிமிடத்தில் கோல் அடித்தார். 88வது நிமிடத்தில் யுனைடெட் வீரர் மட்திஜ்ஸ் செய்த பிழையால், போர்னேமௌத் அணிக்கு Own கோல் கிடைத்தது.
முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) 4-1 என்ற கோல் கணக்கில் போர்னேமௌத் (Bournemouth) அணியை வீழ்த்தியது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025