பெண்களுக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிட்ட ஆணாதிக்க இளைஞர் கைது!
2 ஆடி 2025 புதன் 14:53 | பார்வைகள் : 3670
பிரான்சில், பெண்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக 18 வயது இளைஞர் ஒருவர் Saint-Étienne பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
TikTok போன்ற சமூக வலைதளங்களில் ஆணாதிக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான Incel சிந்தனைகளைப் பகிர்ந்தவர் என்பதும், கைது செய்யும் போது அவரது அருகில் இரண்டு கத்திகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அவருக்கு பயங்கரவாத குழுவுடன் தொடர்பு மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் குற்றங்களைத் திட்டமிடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது அவர் தடுப்புக் காவலில் உள்ளார்.
சந்தேகநபர் Timothy G. என்பவர் Incel இயக்கத்தைச் சேர்ந்தவர் எனத் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் வட அமெரிக்காவில் தோன்றிய இந்த இயக்கம், பெண்கள் தங்களிடம் விருப்பம் இல்லாததால் தான் தாங்கள் துணையின்றி இருக்கிறோம் என்று நம்பும் ஆண்களால் உருவாக்கப்பட்டது.
இவரது வழக்கறிஞர் "இவர் ஒரு பயங்கரவாதி அல்ல, ஆனால் மன அழுத்தத்தில் உள்ள இளைஞர்" எனக் கூறியுள்ளார். இந்தச் செயல்கள் இளைய தலைமுறையைப் பாதிக்கும் இணையத்தளங்களின் தீய தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan