வெப்பம் காரணமாக இருவர் பலி! - 300 பேர் மருத்துவமனையில்!!

2 ஆடி 2025 புதன் 11:51 | பார்வைகள் : 1626
கடந்த இரண்டு நாட்களாக பதிவான வெப்பம் காரணமாக இருவர் பலியானதாக சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஜூலை 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த மரணங்கள் பதிவானதாக அமைச்சர் Agnès Pannier-Runacher தெரிவித்தார். இந்த மரணங்கள் வெப்ப அலையுடன் நேரடியாக தொடர்புபட்டவை எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மரணங்கள் பதிவான மாவட்டங்களோ, அவர்களின் வயது விபரங்களையோ அமைச்சர் வெளியிடவில்லை.
மயக்கம், தலைசுற்றல், நீர் இழப்பு போன்ற வெப்பகால நோயினால் பாதிக்கப்பட்ட 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.