உளவு பார்க்கும் ரஷ்யா! - பிரெஞ்சு எல்லையில் ரஷ்ய நீர்மூழ்கி!!

2 ஆடி 2025 புதன் 09:14 | பார்வைகள் : 1458
ஆங்கிலக்கால்வாயில் ரஷ்ய கப்பல்கள் வேவு பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை பிரெஞ்சு படகு ஒன்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட சம்பவம் சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
ஆங்கிலக்கால்வாயில் எந்த நாட்டு கப்பல்களும் செல்ல அனுமதி உள்ளது. ரஷ்யாவின் கப்பல்கள் ஆங்கிலக்கால்வாயை சுற்றி வருகின்றன. அவை பயணிகள் கப்பலோ, சரக்கு கப்பல்களோ இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் 29, சனிக்கிழமை அன்று பிரான்சின் Côtes-d'Armor கடற்பிராந்திய எல்லைக்கு அருகே ரஷ்ய கப்பல் ஒன்றை எதிர்கொண்டதாக பிரெஞ்சு மீன்பிடி படகு ஒன்று தெரிவித்துள்ளது. சில புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
குறித்த ரஷ்ய கப்பல், ஒரு நீர்மூழ்கி எனவும், திடீரென கப்பம் மேலெழுந்து அதிர்ச்சியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.