Paristamil Navigation Paristamil advert login

வெப்பம் : சிவப்பு - செம்மஞ்சள் - 59 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

வெப்பம் : சிவப்பு - செம்மஞ்சள் - 59 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

2 ஆடி 2025 புதன் 07:01 | பார்வைகள் : 1176


 

நேற்று செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் பதிவான அதிக வெப்பம், இன்று ஜூலை 2, புதன்கிழமையும் தொடர்கிறது. இன்று காலை 6 மணிக்கு வானிலை அவதானிப்பு மையம் வெளியிட்ட தகவலின் படி, 59 மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாவட்டங்களான Aube, Cher, Loiret மற்றும் Yonne ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு Ain, Aisne, Allier, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Ardennes, Aude, Bouches-du-Rhône, Cantal, Corrèze, Haute-Corse, Côte-d'Or, Creuse, Doubs, Drôme, Gard, Hérault, Indre, Indre-et-Loire, Isère, Jura, Loir-et-Cher, Loire, Haute-Loire, Lozère, Maine-et-Loire, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Puy-de-Dôme, Pyrénées-Orientales, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Paris, Seine-et-Marne, Yvelines, Var, Vaucluse, Vienne, Haute-Vienne, Vosges, Territoire de Belfort, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய 55 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மாவட்டங்களுக்கு குறைந்த பட்ச எச்சரிக்கையான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் அதிகபட்சமாக 40℃ வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்