பயிற்சி நெறியின் நிதி மறுசீரமைப்பு: 500 மில்லியன் யூரோ சேமிக்க அரசின் திட்டம்!

1 ஆடி 2025 செவ்வாய் 22:25 | பார்வைகள் : 509
2025 ஆம் ஆண்டுக்குள் 450 முதல் 500 மில்லியன் யூரோ வரை நிதி சேமிக்க வேண்டும் என்ற நோக்குடன், பயிற்சிக்கான நிதி முறைமைக்கு (apprentissage) புதிய சீரமைப்பை தொழிற்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் இறுதியில் சமூகப் பங்குதாரர்களிடம் முன்வைத்தது.
2017 ஆம் ஆண்டு முதல் பயிற்சி ஒப்பந்தங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன — தற்போது 8.7 லட்சம் இளம் மாணவர்கள் பயிற்சி ஒப்பந்தத்தில் உள்ளனர். இது போலி உயர்வு அல்ல, ஆனால் அரசின் நோக்கம் சேமிப்பு
தொழில்முறைக்கு ஏற்றவாறும், பொருளாதாரத்துக்கு ஏற்றவையாகவும் பயிற்சிகளை மாற்றுதல்.
நிதி முறைமையின் நீடித்த தன்மையை உறுதிப்படுத்துதல் போன்றவற்றை அரசு கையில் எடுத்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான முக்கிய மாற்றங்கள்
புதிய சீரமைப்பின் கீழ், 2025ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய திட்டங்கள்:
Bac+3 (Licence) அளவிலான பட்டம் பெற பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கான ஒப்பந்தங்களுக்காக, நிறுவனங்கள் 750 யூரோ கட்டாய பங்களிப்பு செய்ய வேண்டும்.
இந்த 'பொது பங்களிப்பு' திட்டம், இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் திருத்தச்சட்டத்தின் (décret) மூலம் நடைமுறைக்கு வரும்.
இந்த ஒரே நடவடிக்கையிலேயே 226 மில்லியன் யூரோ 2025க்குள் சேமிக்க முடியும் என அரசு கணிக்கிறது.
இத்திட்டத்தின் நோக்கம் தொலைநோக்கில் பயிற்சி முறைமையை நிதி ரீதியாக நிலைத்ததாகவும், பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப மாற்றமுடியும் வகையில் உருவாக்குவதே ஆகும் என அரசு தனது செயலிற்கு விளக்கம் கொடுத்துள்ளது.