Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் - புடின் உரையாடல் - 2022க்குப் பின்னராக!

மக்ரோன் - புடின் உரையாடல் - 2022க்குப் பின்னராக!

1 ஆடி 2025 செவ்வாய் 19:22 | பார்வைகள் : 533


உக்ரைனில் ரஸ்யாவின் தாக்குதலின் பின்னர் அதாவது மூன்றாண்டுகளுக்குப் பின்னர், ரஸ்ய அதிபர் விலாதிமிர் புடின் மற்றும் பிரஞ்சு அதிபர் எமானுவேல் மக்ரோன் முதன்முறையாக தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.

ஜூலை 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி, இரண்டு தலைவர்களும் உக்ரைனில் நடந்துவரும் போரின் நிலைமையும், ஈரானின் அணு திட்டமும் குறித்தும் விவாதித்துள்ளனர்.

எலிசேவின் அறிக்கையில், மக்ரோன் உக்ரைனின் முழுமையான அதிகாரம் மற்றும் புவியியல் ஒருங்கிணைப்புக்கான பிரான்சின் உறுதியான ஆதரவை மக்ரோன் தெரிவித்துள்ளார்.
*
அவர் 'விரைவாக தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ரஸ்சா -உக்ரைனின் இடையே ஒரு நிலையான அமைதியை ஏற்படுத்துலதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும்' எனவும் வலியுத்தி உள்ளார்.

புடின் மேற்கத்திய நாடுகள் பாதுகாப்புத் தேவைகளை புறக்கணித்தார். மேலும்

'உக்ரைனில் நடக்கும் போரானது மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளின் நேரடி விளைவாகவே உள்ளது. அவர்கள் பல ஆண்டுகளாக ரஸ்யாவின் பாதுகாப்புத் தேவைகளை புறக்கணித்து, உக்ரைனில் ஒரு ரஸ்ய எதிர்ப்பின் அடிப்படையைக் கட்டியெழுப்பியுள்ளனர்'
'நீடித்த அமைதிக்கான ஒப்பந்தம் என்பதானது ஒரு நீண்டகால அடிப்படையில் இருக்கவேண்டும'  எனவும் மக்ரோனிற்கு புட்டின் பதிலளித்ததுடன் போரின் தீவிரத்திற்கு ஐரோப்பிய நாடுகளே ழுமையான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இருவரும் ஈரானின் அணு திட்டம் மற்றும் மத்திய கிழக்கு நிலைமையைப்பற்றியும் பேசினர்.

கிரெம்லின் மாளிகையின் தகவலின் படி 'அணு சக்தியை அமைதியான நோக்கத்துக்காக பயன்படுத்த ஈரானுக்கு உரிய உரிமையை மதிக்க வேண்டிய அவசியம் உள்ளது' என்றும், ஐ.நா. பன்னாட்டு அணு ஆராய்ச்சி நிறுவனம் (AIEA) உடன் ஈரான் ஒத்துழைக்க வேண்டியதையும்  புடின் வலியுறுத்தி உள்ளார்.

எலிசே இதற்கெதிராக கூறியது: 'AIEA ஆய்வாளர்கள் தாமதமின்றி தங்கள் பணியை மீண்டும் தொடங்க முடிக்க வேண்டும்.'
மக்ரோன், ஈரானின் ஏவுகணைத் திட்டம், மற்றும் பிராந்தியத்தில் அதன் தாக்கம் போன்ற முக்கிய அம்சங்கள் தொடர்பாக ஒரு மரியாதைக்குரிய மற்றும் நீடித்த தீர்விற்கான தனது உறுதிப்பாட்டை தெரிவித்தார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்