Paristamil Navigation Paristamil advert login

செம்மணியில் சிறுவனின் முழுமையான எலும்புக்கூட்டுத் தொகுதி மீட்பு

செம்மணியில் சிறுவனின் முழுமையான எலும்புக்கூட்டுத் தொகுதி மீட்பு

1 ஆடி 2025 செவ்வாய் 17:45 | பார்வைகள் : 219


செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவனின் முழுமையான எலும்புக்கூட்டுத் தொகுதி இன்று மீட்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காலணி ஒன்றும் பொம்மை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் பின்னிப்பிணைந்த நிலையில் சில என்புக்கூட்டுத் தொகுதிகளும் இன்று அடையாளம் காணப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்