Renault-Nissan நிறுவனங்கள் விலகல்: Renaultஇற்கு €9.5 பில்லியன் இழப்பு!

1 ஆடி 2025 செவ்வாய் 16:59 | பார்வைகள் : 581
பிரெஞ்சு கார் நிறுவனமான olan Renault, நிஸானில் (Nissan) தனது பங்குகளை இனி நிதி சொத்தாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதனால் 9.5 பில்லியன் யூரோ நட்டம் கணக்கில் பதிவாகியுள்ளது.
இந்த மாற்றம் ரெனோல்ரின் பங்குகளில் எந்தவித தாக்கமும் ஏற்படுத்தாது என்றும், அதன் CEO விலகுவதற்கும் இதற்குத் தொடர்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நிஸானின் பங்குமதிப்பு கடந்த காலங்களில் வீழ்ச்சி கண்டதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரெனோல்ற், நிஸான் மற்றும் மிட்சுபிஷி (Mitsubishi) ஆகியவை 2023 முதல் தங்களது கூட்டணியை மெதுவாக கலைத்துக் கொண்டிருக்கின்றன.
2025 முதல் பரஸ்பர பங்கு வைத்திருக்கும் அளவை 15% லிருந்து 10% ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளன. இருப்பினும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை வளர்ச்சி திட்டங்களில் இவை தொடர்ந்து இணைந்து பணியாற்ற உள்ளன. நிஸான் தற்போது 20,000 வேலைவாய்ப்புகளை குறைக்கும் கடுமையான மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ளது.