Paristamil Navigation Paristamil advert login

விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி

விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி

1 ஆடி 2025 செவ்வாய் 12:47 | பார்வைகள் : 136


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு உள்ளது. விரைவில் அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும்'' என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா மிகவும் நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு உள்ளது.

பிரதமர் மோடி உடன் அதிபர் டிரம்ப் கொண்டிருக்கும் உறவு தொடர்ந்து நீடிக்கும். விரைவில் அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும். அதிபர் டிரம்ப் மற்றும் வர்த்தக குழு ஒப்பந்தத்தை இறுதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சமீப காலமாக, இந்தியாவுடனான பணிகளில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அதிபர் டிரம்ப் பலமுறை சூசகமாக குறிப்பிட்டு பேசி வருகிறார்.

''இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம்'' என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்