Paristamil Navigation Paristamil advert login

Bondy: இரு வாரங்களில் இரண்டு கடைகள் பகலில் தீக்கிரை!

Bondy: இரு வாரங்களில் இரண்டு கடைகள் பகலில் தீக்கிரை!

30 ஆனி 2025 திங்கள் 21:53 | பார்வைகள் : 718


Bondy நகரின் Neuburger பகுதியில், கடந்த இரு வாரங்களில் இரு வணிகக் கடைகள் தீக்கிரையானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் சோனியா கே (Sonia K )என்ற முடி அலங்காரக் கூடத்தை, முகமூடி அணிந்த இருவர் புகுந்து பெட்ரோல் கொண்டு தீ வைத்து எரித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உள்ளிருந்தவர்கள் பின்வழியாக தப்பித்துள்ளனர். இதற்கு பதினைந்து நாட்களுக்கு முன், அதே இடத்தில் உள்ள ஒரு மருந்துக்கடையும் தீயால் சேதமடைந்தது.

இரண்டு சம்பவங்களும் தொடர்புடையதா என்பது கேள்விக்குறியாக உள்ளது, ஏனெனில் திருடும் நோக்கம் எதுவும் காணப்படவில்லை. இதனால் தீவைத்த காரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. 

நகர மேயர் ஸ்டீபன் ஹெர்வே சம்பவ இடத்திற்கு வந்து வணிகர்களை நிம்மதியடையச் செய்துள்ளார். நகராட்சி, இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலையைப் பற்றி ஆளுநரிடம் பல வாரங்களாக எச்சரிக்கை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்