Paristamil Navigation Paristamil advert login

பலாப்பழ கொட்டை வடை

பலாப்பழ கொட்டை வடை

30 ஆனி 2025 திங்கள் 17:03 | பார்வைகள் : 116


பலாப்பழத்தை வைத்து பலவிதமான சுவையான ரெசிபிக்கள் செய்யலாம். பலாப்பழ கேசரி, பலாப்பழ பாயசம், பலாப்பழ கறி, பலாப்பழம் ஸ்வீட் போன்ற ரெசிபிக்கள் எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.

அந்த வகையில் பலாப்பழத்தை தவிர்த்து அதில் இருக்கும் கொட்டையையுமே நாம ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம். குறிப்பாக பலாப்பழக்கொட்டை வேக வைத்து தராமல், அதனை சுட சுட காரசாரமான வடையாக செய்து தந்தால், அனைவருமே விரும்பி சாப்பிடுவாங்க.

தேவையான பொருட்கள்: பலாக்கொட்டை தேவையான அளவு வெங்காயம் பூண்டு -7 சோம்பு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 5 தேவையான அளவு கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி- சிறிய துண்டு பச்சைமிளகாய்.

செய்முறை : முதலில் குக்கரில் தேவையான அளவு பலாக்கொட்டையை தோல் நீக்கி 4-5 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சோம்பு, வர மிளகாய், வேக வைத்திருந்த பலாக்கொட்டையும் சேர்த்து நன்றாக கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சின்ன சின்னதாக நறுக்கியா வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு பெருங்காயத்தூள், உப்பு, அரைத்து வைத்திருந்த பலாக்கொட்டை மாவு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
.
சிறிது நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி தேவையான வடிவில் மாவை தட்டி பொரித்து எடுத்தால், சத்தான சுவையான "பலாக்கொட்டை வடை" தயார். இதனை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக கண்டிப்பாக வீட்டில் செய்து கொடுக்கலாம். குழந்தைகளின் உடல் ஆரோகியத்திற்கு சிறந்தது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்