உண்மையைச் சொன்னால் என்னை சிறையில் அடைப்பீர்கள் - இராமநாதன் அர்ச்சுன
30 ஆனி 2025 திங்கள் 14:10 | பார்வைகள் : 1856
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன, விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டார்.
இதன்போது கருத்து வௌியிட்ட அவர், விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் உள்ளே என்ன இருந்தது, அவைகள் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் மழுமையான தகவல்களை தன்னால் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், அதற்காக என் மீது போதைப்பொருள் வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தாவது,
“என்னை நீக்குவதற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை நான் நீதிமன்றத்துடன் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு பயமாக உள்ளது. அந்த 323 கொள்கலன்களுக்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை எனக்குத் தர முடியும். அது எங்கிருந்து வந்தது, எந்த நாட்டிலிருந்து வந்தது? என்பதை வழங்க முடியும். ஆனால் அதை வழங்கிய பின்னர் போதைப்பொருள் வழக்கில் பொய்யாக என்மீது வழக்கு பதிவு செய்து எனது எம்.பி பதவியை பறிக்கப் போவதில்லை என்று நிரூபிக்கச் சொல்லுங்கள். நான் அதை பாராளுமன்றத்தில் முன்வைப்பேன். இல்லையெனில், நான் வேறு நாட்டிற்கு ஓடிப்போய் அதை அம்பலப்படுத்த வேண்டியிருக்கும். அந்த 320 கொள்கலன்களுக்குள் என்ன இருந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல பயப்படவில்லை. முழு விபரங்களையும் நான் உங்களுக்குச் சொல்ல முடியும், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது… ஆனால் எனக்கு இறப்பதற்கு பயமில்லை. இவர்கள் என்னை தேவையற்ற வழக்குகளில் அவ்வப்போது சிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது இவர்களிடம் பொலிஸ் அதிகாரம் உள்ளது. இப்போது இவர்கள் எம்.பி பதவியை பறித்து, உண்மை வெளிவருவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்.”
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan