கனடாவில் நான்கு வாகனங்கள் மோதி விபத்து – இரண்டு பேர் காயம்
30 ஆனி 2025 திங்கள் 10:18 | பார்வைகள் : 1902
டொரோண்டோவில் உள்ள டான் வாலி பார்க்வே நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் மோதிய கடுமையான விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டான் மில்ஸ் வீதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
30 வயது மதிக்கத்தக்க பெண் காயமடைந்துள்ளதாகவும், இந்தப் பெண்ணின் காயங்கள் கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லாதவையாக இருக்கிறது என கூறினர்.
மற்றொரு நபர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan