Paristamil Navigation Paristamil advert login

நாடு முழுவதும் தகதகக்கும் வெப்பம்! - 40℃ தாண்டுகிறது...!!

நாடு முழுவதும் தகதகக்கும் வெப்பம்! - 40℃ தாண்டுகிறது...!!

30 ஆனி 2025 திங்கள் 08:07 | பார்வைகள் : 7292


 

இன்று ஜூன் 30, திங்கட்கிழமை நாடு முழுவதும் அனல் அள்ளித்தெளிக்கும் வெப்பம் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

மொத்தமாக 84 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் இல் து பிரான்ஸ் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன. நாட்டின் தென்மேற்கு பகுதிகளை தவிர்த்து, நாடு முழுவதும் செம்மஞ்சள் பூசப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டின் பின்னர் இதுபோன்ற வெப்பம் முதன்முறையாக பதிவாகிறதாக Meteo France சுட்டிக்காட்டியுள்ளது.

மிக குறைந்த வெப்பமாக 37℃ வெப்பமும், அதிகபட்சமாக 40℃ வெப்பமும் பதிவாகும் எனவும், அதற்கு மேலும் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்