ஈரானிய ஜனாதிபதியுடன் மீண்டும் உரையாடிய இம்மானுவல் மக்ரோன்!!

30 ஆனி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 1338
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஈரானிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஐந்து நாட்களில் இரண்டாவது தடவையாக இந்த உரையாடல் இடம்பெற்றது.
Cécile Kohler மற்றும் Jacques Paris ஆகிய இரு பிணையக்கைதிகளையும் விடுவிக்க கோரி இந்த உரையாடலின் போது அவர் வலியுறுத்தியுள்ளதாகவும், ஈரானில் உள்ள பிரெஞ்சு சொத்துக்களை பாதுகாக்குமாறும் ஈரானிய ஜனாதிபதி Massoud Pezeshkian இடம் மக்ரோன் வலியுறுத்தினார்.
முன்னதாக ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னர், ஐந்து நாட்களுக்கு முன்னர் மக்ரோன் அவருடன் தொலைபேசியூடாக உரையாடியிருந்தார்.
'போர் நிறுத்தத்தை மதிக்குமாறும். மீண்டும் ஒருமுறை யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்!' எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1