பரவலான தீ - முகாம்கள், பேருந்துப் பாதைகள் மூடப்பட்டன!
30 ஆனி 2025 திங்கள் 00:14 | பார்வைகள் : 2305
ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸின் Aude பகுதியில், A61 மற்றும் A9 நெடுஞச்சாலைகள் சந்திக்கும் பகுதியில் பல தீவிபத்துகள் ஏற்பட்டு உள்ளன
இதனால்:
400 ஹெக்டேர் காடுகள் எரிந்துள்ளன
500 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் Canadair, 4 Dash விமானங்கள், உலங்குவானுர்தி என தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

தீயின் காரணம்:
ஒரு வாகன நிறுவனத்தில் போட்டப்பட்ட barbecue முறையாக அணைக்காத காரணத்தால் தீ பற்றி உள்ளது எனவும் இதிலிருந்து பரவிய தீ ஏழு பெரும் தீ விபத்துக்களை உருவாக்கி உள்ளது.
இதிலிருந்து வெளியேறிய சாம்பல் 12 கிமீ தூரத்திற்குப் பரவி உள்ளது.
பாதிப்புகள்:
A61 மற்றும் A9 நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் மூடப்பட்டன
வாகனங்கள் நீண்ட நேரம் வறண்ட வெப்பத்தில் நிலைத்திருந்ததால் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
Bizanet முகாமமில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சந்தேக நபர் கைது
தீவிபத்துக்குப் பொறுப்பானதாக சந்தேகிக்கப்படும் நபர், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
AUDE பகுதி 'செம்மஞ்சள் அபாய நிலை' என காடுத்தீ எச்சரிக்கை பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
90% காடுத்தீக்கள் மனித தவறுகளால் ஏற்படுவதாக சர்வதேச தரவுகள் கூறுகின்றன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan