கோவிட்-19 : 2025 கோடைக்காலத்தில் மீண்டும் பரவ வாய்ப்பு - உஎச்சரிக்கை!
29 ஆனி 2025 ஞாயிறு 13:45 | பார்வைகள் : 6578
பிரான்சில் கோவிட்-19 வைரஸ் மீண்டும் பரவலாம் என பிரான்ஸ் மருத்துவ சேவைகள் 2025 ஜூன் 25 அன்று எச்சரித்துள்ளது. தடுப்பூசி போடல் போதிய அளவில் நடைபெறவில்லை என்பதே முக்கிய காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடையில் வைரஸ் பரவ முடியுமா? பொதுவாக வைரஸ் பரவுவது குளிர்காலத்தில் அதிகம்.
ஆனால் கோடையில் மக்கள் கவனக்குறைவாக இருப்பதாலும், கூட்டம் மற்றும் தொடர்புகள் அதிகரிப்பதாலும், தொற்று பரவ வாய்ப்பு அதிகமாகிறது. இது 2024 மற்றும் 2025 ,ல் பதிவான புள்ளிவிவரங்களாலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
2024 ஜூனிலேயே பிரான்சில் தொற்று அதிகரித்தது. 2025 பிப்ரவரியில் உலக சுகாதார அமைப்பு (WHO) தகவலின்படி, உலகளவில் 11% சோதனைவிதத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஐரோப்பாவில் 2025 ஜூனில் தொற்று எண்ணிக்கை மெதுவாக உயரும் நிலையில் உள்ளது.
2024 இல் JN.1, KP.2, KP.3, LB.1 போன்ற வகைகள் பரவின. KP.2 போன்றவை, பழைய தடுப்பூசிகளால் உருவான தடுப்பாற்றலுக்கு எதிராக இருக்கும் சாத்தியம் உள்ளது.
தற்போது NB.1.8.1 எனும் புதிய வகை, ஓமிக்ரான் வகையிலிருந்து உருவாகி, ஆசிய நாடுகளில் (ஹாங்காங், தைவான், சிங்கப்பூர்) விரைவாக பரவி வருகிறது.
முந்தைய தடுப்பூசிகள் மற்றும் அடைந்த தொற்றுகள் மூலம் மக்கள் ஒரு கூட்டுத் தடுப்பாற்றலை பெற்றுள்ளனர்.
இது பலருக்கு கடுமையான நிலைமைகளைத் தடுக்கும், அதாவது மருத்துவமனைகளின் பராமரிப்பு பிரிவுகள் நிரம்பி வழிவதில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan