Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உணவக வெளிப்பகுதியில் புகைக்கத் தடை இல்லை – நலவாழ்வு அமைப்புகள் கடும் கன்டணம்!

உணவக வெளிப்பகுதியில் புகைக்கத் தடை இல்லை – நலவாழ்வு அமைப்புகள் கடும் கன்டணம்!

29 ஆனி 2025 ஞாயிறு 00:24 | பார்வைகள் : 5558


29 ஜூன் முதல், பிரான்சில் உள்ள பூங்காக்கள், கடற்கரை, பள்ளிகள், நூலகங்கள் மற்றும் பெரு மைதானங்கள்; அருகே புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருந்தகம் மற்றும் உணவகங்களின் வெளிப்பகுதியான டெரஸ்கள் இந்தத் தடையில் இருந்து விதி விலக்குப் பெறுகின்றன.

இந்த புதுத் தடை வெளிவெளியாக உள்ள உணவக டெரஸ்களை உள்ளடக்கவில்லை.

2023ல், முன்னாள் சுகாதார மந்திரி  Aurélien Rousseau, 2032க்குள் ஒரு புகையிலை இல்லா தலைமுறை இலக்கை முன்வைத்தார்.
ஆனால், அதற்கான திட்டமான PNLT (2023–2027)- இல் கூட டெரஸ்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

'பிரெஞ்சுக்காரர்களை தொந்தரவு செய்யாதீர்கள். நான் ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை. எல்லோரும் ஏற்கக்கூடிய முடிவாக இருக்க வேண்டும். பிரெஞ்சுக்காரர்களை எப்போதும் தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள' என்பது 2024 பிப்ரவரியில், துணை சுகாதார மந்திரி யானிக் நொயுடரின் (Yannick Neuder) கருத்தாக இது இருந்தது.

இந்த கருத்துகளிற்கு புகையிலை எதிர்ப்பு தேசிய குழு (CNCT) தன் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரவித்திருந்தது. 'இது ஒரு இதய மருத்துவருக்கே அசிங்கமான கருத்து – அதுவும் சுகாதார அமைச்சராக இருக்கும்போதே!' எனக் கண்டித்திருந்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு, தற்போதைய சுகாதார அமைச்சர் கேத்தரின் வோத்ரன் (Catherine Vautrin), மே மாத இறுதியில் ஜூலை 1 ஆம் தேதி புகையிலை தடை அமலுக்கு வரும் என்று அறிவித்தார், இது இறுதியில் ஜூன் 29 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்தத் தடை அருந்தகத்தின்  உணவகங்களின் தெராஸ்கள் அவர் மீண்டு பாதிக்கப்பட மாட்டாது என்பதனை உறுதிப்படுத்தினார்.

'நாங்கள் குழந்தைகள் அதிகம் வரும் இடங்களில் தான் கவனம் செலுத்துகிறோம்,'
என்று 29 June க்கான திட்டத்தை சமீபத்தில் உறுதி செய்துள்ளார்.

'இது ஒரு நல்ல ஆரம்பம். ஆனால் போதுமானதல்ல. குழந்தைகள் டெரஸ்களிலும் இருக்கிறார்கள்'
நாளை புகையற்ற சமுதாயத்தை உருவாக்கும் தொண்டு நிறுவனம்  எனDemain non fumeurs கண்டித்துள்ளது.

உணவகங்கள் மருந்தகங்கள் இந்த தெராசிற்கான தடை நீக்கலைப் பாராட்டியுள்ளன.

பிரெஞ்சு மக்கள் பார்வை?

OpinionWay நிறுவனத்தின் 2025 கருத்துக்கணிப்பு:

84% மக்கள்: 'டெரஸ்களில் புகை விலக்கு வேண்டும்' எனவும் 
புகை'தொந்தரவு, சுகாதாரப் பிரச்சனை' எனவும் கண்டித்துள்ளன.

மக்கள் விரும்பாத இடங்கள்:
டெரஸ்கள்
வரிசைநிலைகள்
கடற்கரை
ஓய்விடங்கள்
போன்றவற்றில் புகை இல்லாத நிலையை மக்கள் வரவேற்றுள்ளனர்.

அத்தோடு CNCT மின்புகையிலையை (e-cigarette) முழுமையாக தடை செய்ய வேண்டியதும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் புகைத்தல் விளைவால்
75,000 பேர் ஆண்டுக்கு புகையிலையால் இறக்கிறார்கள்
3,000 – 5,000 பேர்: பொதுமக்கள் மற்றவர்கள் புகைக்கும் புகை நச்சுக்கு இரையாகி உள்ளனர்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்